ஏழு மணிநேரமாக உயிருக்கு போராடிய தமிழன் மரணம்

கேரளாவில் விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிய நபருக்கு சிகிச்சையளிக்க கொல்லம் தனியார் மருத்துவமனைகள் மறுத்ததால் பரிதாபமாய் உயிரிழந்துள்ளார்.
தமிழ்நாட்டின் திருநெல்வேலியை சேர்ந்தவர் முருகன்(வயது 30), கோட்டயம் புறநகர்பகுதியில் வசித்து வரும் முருகன் கொல்லத்தில் பால்கறந்து வாழ்க்கை நடத்தி வருகிறார்.
இந்நிலையில் நேற்று இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது விபத்து நேர்ந்தது.
உடனடியாக விரைந்து வந்த அதிகாரிகள் முருகனை கேரள மருத்துவ விஞ்ஞானக் கழக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், அங்கு உயிர்காப்பு கருவிகள் அனைத்தும் உபயோகத்தில் இருந்ததால் மெடிசிட்டி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் மெடிட்ரைனா ஆகிய மருத்துவமனைகளை தொடர்பு கொண்டுள்ளனர்.
ஆனால் அந்த மருத்துவமனைகளும் முருகனுக்கு சிகிச்சை அளிக்க மறுத்துள்ளது, உயிருக்கு போராடியவரை திருவனந்தபுரம் கிமிஸ் மருத்துவமனை, அஜீஜியா மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றும் சிகிச்சை அளிக்க மறுத்துள்ளனர்.
கடைசியாக கொல்லம் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது முருகன் இறந்துவிட்டார்.
ஏழு மணிநேரமாக உயிருக்கு போராடிய நிலையில் உயிரிழந்துள்ளார், இச்சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து கொல்லம் நகர பொலிஸ் கமிஷனர் அஜிதா பேகம் கூறுகையில், முருகனுக்கு சிகிச்சை அளிக்க மறுத்த மருத்துவமனைகள் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட நபர் ஏழு மணி நேரம் ஆம்புலன்சில் இருந்துள்ளார், இது தவறான முன்உதாரணம், சம்பந்தப்பட்ட மருத்துவமனைகளிடம் விசாரணை நடத்துவோம் என தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.