இந்தியக் கடத்தல் தங்கத்தின் மையப்புள்ளியாக வங்கதேசம்!!

சக்கர நாற்காலியைப் பயன்டுத்துபவர் போல நடித்து 25 கிலோ தங்கத்தை தன் தொடைகளுக்குள் மறைத்துக் கடத்திய நபர் வங்கதேசத் தலைநகர் டாக்காவில் உள்ள விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜமீல் அக்தர் என்னும் அந்த நபர், இந்த ஆண்டு மட்டும் 13 முறை வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டதால் சந்தேகமடைந்த சுங்க அதிகாரிகள் அவரை சோதனை செய்தபோது, இந்த கடத்தலை கண்டுபிடித்தனர்.

15 லட்சம் அமெரிக்க டாலர் (சுமார் 9.5 கோடி ரூபாய்) மதிப்புள்ள அந்தக் கடத்தல் தங்கம்தான் இந்த ஆண்டில் வாங்கதேசத்தில் மீட்கப்பட்டதிலேயே அதிகம் மதிப்புடையது. இந்தியாவுக்குள் தங்கத்தைக் கடத்துவதற்கான மையப்புள்ளியாக வங்கதேசம் திகழ்கிறது.

உலகிலேயே தங்கத்தை அதிகம் பயன்படுத்தும் நாடான இந்தியாவில் இறக்குமதி வரி அதிகமாக உள்ளதால், தங்கம் கடத்தப்படுவது அதிகரித்துள்ளது.

முன்னதாக, ஞாயிறன்று காலை, சிங்கப்பூரில் இருந்து ஜமீல் வந்த விமானத்தின் கழிவறைக்குள் ஆறு கிலோ தங்கம் மறைத்து வைக்கப்பட்டிருந்ததைக் கண்டுபிடித்ததாக, விமான நிலையதின் சுங்கத் துறை செய்தித் தொடர்பாளர் ஆசனுல் கபீர் ஏ.எஃப்.பி செய்தி முகமையிடம் கூறினார்.

கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் வங்கதேசதிலுள்ள விமான நிலையங்களில் கைப்பற்றப்பட்டுள்ளன. அவற்றில் பெரும்பாலானவை வளைகுடா நாடுகளில் இருந்து கடத்தி வரப்பட்டவை.

20014-ஆம் ஆண்டு முதல் வளைகுடா நாடுகளில் பணிபுரியும், நூற்றுக்கும் அதிகமான வங்கதேச நாட்டினர், விமானம் மூலம் தங்கம் கடத்த முயன்றதற்காகக் கைது செய்யப்பட்டுள்ளார்.

விமானப் பணிப்பெண்கள், விமான நிலைய ஊழியர்கள், அங்குள்ள பாதுகாப்பு அதிகாரிகள் ஆகியோர் கடத்தல் கும்பலில் உள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதிகரித்து வரும் தங்கக் கடத்தல்
  • இதே போன்று கடந்த ஆண்டும் சக்கர நாற்காலி பயன்படுத்துபவர் போல நடித்து 23 கிலோ தங்கம் கடத்த முயன்ற நபரை அதிகாரிகளிடம் சிக்கிக்கொண்டார்.

  • கடந்த மே மாதம், டாக்கா விமான நிலையத்தில் 600 கிராம் எடையுள்ள ஆறு தங்கக் கட்டிகளைக் கடத்த முயன்ற நபர் கைது செய்யப்பட்டார்.

  • இந்த மாதம், கொல்கத்தாவில் இருந்து வங்கதேசத்துக்கு வந்த விமானத்தில் 1.2 கிலோ தங்கம் மற்றும் உலோகங்களை வெட்டும் இயந்திரம் ஆகியவற்றைத் தன் பையில் வைத்திருந்த ஒரு பயணியை அதிகாரிகள் கைது செய்தனர்.

No comments

Powered by Blogger.