சிவனின் அர்த்தநாரீஸ்வரர் ரூபம் பாகிஸ்தானில் விரும்பப்படுகிறதா?

பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் உள்ள மர்கிலா ஹில்ஸ் அருகே உள்ள குடியிருப்புப் பகுதியில் நாங்கள் கூடியிருந்தோம்.

அது, வட இந்தியாவின் சிறு நகரங்களான ஹாபூர், பதாயூன், பாராபங்கி, மஹோபா மற்றும் லலித்பூர் போன்றே மர்கிலா ஹில்ஸும் இருந்தது. பத்திரிகையாளர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் அரசு அலுவலகங்களில் பொறுப்பான பதவியில் பணிபுரியும் இளைஞர்கள் என பலதரப்பினர் அங்கு கூடியிருந்தோம்.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே எத்தனை காலம் இந்த பகை உணர்ச்சி தொடரும், அது முடிவுக்கு வராதா? இரு நாடுகளிலும் எந்தப் பகுதி எவ்வளவு வளர்ச்சியடைந்திருக்கிறது, அதற்கு காரணம் என்ன? என்று எங்களது உரையாடல் பல கோணங்களில் தொடர்ந்தது.

ஆனால், அங்கு கூடியிருந்த இளைஞர்களில் ஒருவர், இந்து மத கடவுளரான சிவனின் ரூபங்களில் ஒன்றான அர்தநாரீஸ்வரின் பல்வேறு பரிமாணங்களை விவரிக்கத் தொடங்கியபோது, பாகிஸ்தானியர்கள் பற்றி என் மனதில் உருவாகியிருந்த ஒரு பொது எண்ணம் தவறு என்று உணர்ந்துக்கொண்டேன்.
பல்வேறு வடிவங்களை புரிந்து கொள்ளும் ஆவல்

அந்த இளைஞன் பாகிஸ்தான் - ஆஃப்கானிஸ்தான் எல்லைப் பகுதியில் ஜெளப் பகுதியில் வசிக்கும் ஒரு பாரம்பரிய முஸ்லிம் குடும்பத்தில் பிறந்தவர். குழந்தை பருவத்தில் இருந்து மசூதி, குரான், ஷரியா மற்றும் நபிகளின் மொழிகள் (ஹதீஸ்) இன்படி நடப்பது என முழுமையாக இஸ்லாமியச் சூழலில் வளர்ந்தவர்.

சிவனின் பல்வேறு ரூபங்களை புரிந்துக் கொள்ளும் ஆவல் தனக்கு எப்படி தோன்றியது என்பது புரியாத புதிராகவே இருப்பதாகவே அவர் கூறுகிறார். தாண்டவம், நடராஜர் மற்றும் குறிப்பாக அர்தநாரீஷ்வரின் வடிவம் தன்னை மிகவும் ஈர்ப்பதாக அவர் தெரிவித்தார்.

அரசு அலுவலகத்தில் பொருளாதாரத் துறையில் பணிபுரியும் அவர் சித்திரக்காரரோ, சிற்பியோ அல்ல. ஆனால் சிவனின் அர்த்தநாரீஷ்வரர் ரூபத்தின் வெளிப்பாடு மற்றும் பிரம்மாண்டம் அவர் வெகுவாக ஈர்க்கிறது.

அதன் ஈர்ப்புத் தன்மையிலிருந்து கிடைத்த தூண்டுதலால் கேன்வாஸில் அர்த்தநாரிஷ்வர்ரின் சிற்பத்தை உருவாக்கத் தொடங்கினார்.

"எனக்கு இதன் ஆதியும் அந்தமும் தெரியாது. இந்த சிற்பம் இன்னும் முழுமையடையவில்லை, இதை நான் வரையவில்லை, அது தன்னைத் தானே உருவாக்கிக் கொள்கிறது என்றே சொல்வேன். இந்த படைப்பு எப்போது பூர்த்தியாகும் என்பதும் எனக்குத் தெரியாது" என்று அவர் சொல்கிறார்.

"என்றாவது ஒருநாள் சிவனின் அர்த்தநாரீஷ்வரரின் ரூபத்தை மேடையில் செய்து காட்டுவேன். இது எனது திடமான விருப்பம்" என்ற தனது ஆழமான ஆசையையும் அவர் வெளியிட்டார்.

வேறு மொழியின் அவசியம் ஏற்படவில்லை

இஸ்லாமாபாதில் அந்த வெப்பமான காலத்தில் வீட்டின் மொட்டை மாடியில் அமர்ந்து இளைஞனுடன் உரையாடிக்கொண்டிருந்தபோது, எனது கவனம் தென்கிழக்கு திசையை நோக்கிச் சென்றது. அங்கு இந்தியா இருக்கிறது என்று தோன்றிய அதேநேரத்தில், சிவனின் அர்த்தநாரீஷ்வர வடிவத்தில் இச்சைக் கொண்டிருக்கும் இந்த பாகிஸ்தானி இளைஞரின் விருப்பம் நிறைவேறுமா? என்றும் கேள்வி எழும்பியது.

இந்துக் கடவுளான சிவன் மீது விருப்பம் கொண்ட மக்கள் பாகிஸ்தானிலும் இருப்பதை பத்திரிகைகளோ அல்லது தொலைகாட்சி சேனல்களோ வெளிக்கொணருமா என்றும் என் மனதில் பல கேள்விகள் எழுந்தன.

அந்த மாலைப்பொழுதில் வெளிநாட்டவர்களிடையே உரையாட எனக்கு வேற்றுமொழியோ ஆங்கிலமோ தேவைப்படவில்லை.

ஒருவர் மற்றொருவரின் மொழியை புரிந்துக்கொள்கிறோம், நகைச்சுவையும் புரிந்துக்கொள்கிறோம். மற்றவர்களின் கவிதையையும், இசையும் புரிந்துக் கொள்வதிலும் எந்த சிரமமும் இல்லை.
இது பாகிஸ்தானிலும், வட இந்தியாவில் வாழ்பவர்களுக்கும் இடையிலான அடிப்படை புரிதல். சார்க் நாடுகளில் இந்தியா, இலங்கை, மாலத்தீவுகள், பங்களாதேஷ், பூடான், நேபாளம் மற்றும் பாகிஸ்தான் உள்ளன. தெற்காசிய நாடுகளில் பாகிஸ்தானைத் தவிர, இந்திய மக்களின் எண்ணங்களை புரிந்துக் கொள்ளும் இயல்பு வேறு எந்த நாட்டு மக்களுக்கும் இல்லை.

பிரதமர் மோதி, நவாஸ் ஷெரீஃப்பிடம் எப்படி பேசினார்?

2015-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தின் ஒரு நண்பகலில் திடீரென்று லாகூரில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃபின் வீட்டிற்கு சென்றார் பிரதமர் நரேந்திர மோதி. அப்போது பிரதமர், நவாஸிடம், 'ஹலோ மிஸ்டர் ஷெரீஃப், ஹவ் ஆர் யூ? என்றா கேட்டிருப்பார்?' குஜாராத் பாணியில், ஹிந்தியில், 'க்யா ஹால் ஹை ஷெரீஃப் சாஹப்?' என்று தானே நலம் விசாரித்திருப்பார்?

நரேந்திர மோதியின் விரோதிகளை பாகிஸ்தான் அனுப்பவேண்டும் என்று அமைச்சர் கிரிராஜ் செளஹான் சொன்னது ஏன் என்று தெரியவில்லை. பிரதமரே பாகிஸ்தான் செல்லும்போது, அவரது விரோதிகள் என்ன, மோதியின் ஆதரவாளர்களுக்கும் பாகிஸ்தான் செல்வதற்கு அனுமதி அளிப்பதில் தவறொன்றும் இல்லை.

No comments

Powered by Blogger.