பரீட்சையில் தன்னை விட கூடிய புள்ளி எடுத்த தோழிக்கு விசம் வைத்து கொல்ல முயற்சி!!

பரீட்சையில் தன்னை விட நண்பி அதிக மதிப்பெண்கள் எடுத்த பொறாமையில் தண்ணீர் பாட்டிலில் கொசு மருந்து கலந்து கொடுத்துள்ளார் சக மாணவி இந்நிலையில் பொலிஸார் விசாரணைக்கு பயந்து, மருந்து கலந்த மாணவியும் தனது வீட்டில் தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.

இந்தியா - மத்திய பிரதேசத்தில் உள்ள சத்னா நகரில் தனியார் பாடசாலையில் ஒன்றில் 8ம் வகுப்பு படித்து வரும் மாணவி தன்னை விட நண்பி அதிக மதிப்பெண்கள் எடுத்த பொறாமையில் நண்பியின் தண்ணீர் பாட்டிலில் கொசு விரட்டும் திரவ மருந்தினை கலந்து கொடுத்துள்ளார்.

இதனை அறியாத நண்பி அந்த தண்ணீரை குடித்துள்ளார் அதன்பின் அவருக்கு வாந்தி வந்துள்ளது உடனடியாக பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு மருத்துவமனையில் மாணவி அனுமதிக்கப்பட்டார் தற்பொழுது அவரது நிலைமை சீராக உள்ளது இதுபற்றி பாடசாலை நிர்வாகம் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

அதனை அடுத்து நடந்த விசாரணையில், நண்பியின்; தண்ணீர் பாட்டிலில் கொசு மருந்து கலந்து அதனை மற்றொரு மாணவியின் பையில் மறைத்து வைத்த காட்சி பாடசாலை அறையில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி.யில் பதிவாகி இருந்தது தெரியவந்தது இந்த நிலையில், மருந்து கலந்த மாணவி தனது வீட்டில் வைத்து கொசு விரட்டும் மருந்தினை உட்கொண்டுள்ளார்.

இதனை அடுத்து அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார் அவரது நிலைமை கவலைக்குரிய வகையில் உள்ளது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

No comments

Powered by Blogger.