கடற்புலி மகளிர் அணியின் இசையரசி கப்பலைப் பார்க்க குவியும் பொதுமக்கள்!

அண்மையில் முல்லைத்தீவின், புதுமாத்தளன் பகுதியில் இருந்து இராணுவத்தினரினால் இடம்மாற்றப்பட்ட, கடற்புலிகளின் மகளிர் அணியினர் பயன்படுத்திய இசையரசி என்னும் தாக்குதல் படகு, புதுக்குடியிருப்பு பெருங்காட்டுப் பகுதி இராணுவ முகாமில் பொதுமக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விடுதலைப் புலிகளின் ஏனைய தாக்குதல் படகுகளுடன் சேர்த்து காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் இசையரசி கப்பலையும் விடுதலைப் புலிகள் தொடர்பாக இராணுவத்தினர் எழுதிக் காட்சிப்படுத்தியவற்றையும் யாழ்ப்பாணத்தில் இருந்து சென்ற மாணவிகள் சிலர் ஆய்வு செய்துள்ளதாக தெரியவருகிறது.

இலங்கையில் உள் நாட்டு யுத்தம் நடந்தபோது சிறுவர்களாக இருந்த இன்றைய இளைஞர்கள் பலர் அந்த யுத்தத்தின் முக்கியமான பதிவுகள் குறித்து அறிந்துகொள்வதில் மிகுந்த ஆர்வமாக இருப்பதாக பல்வேறு தரப்பினரும் கூறிவருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்!

No comments

Powered by Blogger.