இணையத்தில் வெளியான விவேகம்… அட, அதுக்குள்ள டவுன்லோடு பண்ணிட்டாங்களா…!

இனி புதுப் படங்கள் வெளியாக நாள் குறிப்பதெல்லாம் வேஸ்ட்தான் போலிருக்கிறது. காரணம் படம் வெளியாவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பே எப்பேர்ப்பட்ட படத்தையும் ஆன்லைனில் பதிவேற்றிவிடுகிறார்கள்.
இன்று அஜித்தின் விவேகம் படம் வெளியாகிறது. இந்தப் படத்தை கிட்டத்தட்ட மூன்றாண்டுகள் பார்த்துப் பார்த்து எடுத்து வந்தார் சிவா. கிட்டத்தட்ட நூறு கோடி ரூபாயை விழுங்கிய இந்த மெகா படம் இன்று விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷலாக வெளியாகிறது.

ஆனால் இன்னும் படம் வெளியாக சில மணி நேரம் உள்ள நிலையில், இந்தப் படம் ஆன்லைனில் வெளியாகிவிட்டது. பலர் இந்தப் படத்தை டவுன்லோடு செய்து பார்த்து வருகின்றனர். ஒருவர் ஃபேஸ்புக் பக்கத்தில் காட்சிகளை துண்டுத் துண்டாக, நேரலையில் காட்டியுள்ளார். அவற்றின் ஸ்க்ரீன் ஷாட்களைத்தான் இங்கே பார்க்கிறீர்கள். பைரசியை ஒழிக்க தமிழ் சினிமா போராடி வரும் நிலையில், ஒரு முக்கிய நடிகரின் பிரமாண்ட படத்தை, வெளியாகும் முன்பே சமூக வலைத் தளங்களிலும், ஆன்லைனிலும் வெளியிட்டிருப்பது அதிர்ச்சியைத் தருகிறது.


No comments

Powered by Blogger.