முடங்கிய பேஸ்புக்... ட்விட்டரில் செய்தி தட்டிய மார்க்!

சமூக வலைதளங்களில் மிக முக்கிய இடம், பேஸ்புக் -க்கு உண்டு. பேஸ்புக் இன்று சாதாரண மனிதனின் சட்டை பைகளில் மிக சுலபமாக உலவுகிறது. உலக அளவில் பேஸ்புக் ஏற்படுத்திய தாக்கம் மிக பெரியது. பலரது நாள்கள் தொடங்குவதும் தூங்குவதும் பேஸ்புக்கில்தான்.
இப்படிபட்ட பேஸ்புக் இல்லை என்றால் எப்படி இருக்கும். இன்று சில மணி நேரம் அப்படி ஒரு நிகழ்வு நடந்தது. அமெரிக்கா, இங்கிலாந்து, பிரேசில், ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் இன்று பேஸ்புக்கில் நுழைய முடியாமல் தவித்தனர். சிலருக்கு பேஸ்புக் நிறுவனத்தின் இருந்து இன்னும் சிறிது நேரத்தில் சரி செய்யப்படும் என்ற தகவல் அனுப்பட்டது. இந்நிலையில் பேஸ்புக் நிறுவனர் மார்க் சூக்கர்பெர்க், தனது ட்விட்டர் பக்கத்தில், "பேஸ்புக் இணையதளம் சிறு தடங்களில் உள்ளது. எங்கள் பொறியாளர்கள் சரி செய்யும் முயற்சியில் உள்ளனர். விரைவில் சேவை தொடரும்" என்று ட்வீட் தட்டினார். 

சிறிது நேரம் கழித்து பேஸ்புக் சிக்கல்கள் களையப்பட்டு, பேஸ்புக் வழக்கம்போல் செயல்பட்டது.

No comments

Powered by Blogger.