யாழ் படகு விபத்து - காணாமல் போன மாணவரின் சடலம் மீட்பு

யாழ்ப்பாணம் - மண்டைத்தீவு கடற்பகுதிக்கு அப்பால் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் காணாமல் போயிருந்த உயர் தர மாணவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தினேஸ் என்ற மாணவரின் சடலமே இவ்வாறு கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இந்த மாணவரின ்பிறந்தநாளை கொண்டாடும் முகமாக , இன்றைய உயர்தர பரீட்சை நிறைவடைந்தவுடன் மாணவர்கள் ஏழு பேர் இணைந்து மண்டைத்தீவு கடற்பகுதிக்கு சென்று அங்கு படகு சவாரி செய்துள்ளனர்.

பகுதியளவில் சேதமடைந்திருந்த படகொன்றிலேயே குறித்த மாணவர்கள் படகு சவாரி செய்துள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

இதன் போது குறித்த படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதில் , 5 மாணவர்கள் உயரிழந்த நிலையில் , மேலுமொரு மாணவர் நீந்தி கரை திரும்பியுள்ளார்.

தினேஸ் என்ற மாணவர் காணாமல் போயிருந்த நிலையில் , அவரின் சடலம் சற்று முன்னர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதன்படி , இந்த படகு விபத்தின் பலி எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.

படகு விபத்தில் உயிரிழந்த குறித்த மாணவர்கள் மது அருந்தி இருந்தாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சடலங்கள் தற்போதைய நிலையில் , யாழ். மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.யாழ்ப்பாணம் - மண்டைத்தீவு கடற்பகுதிக்கு அப்பால் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இம்முறை உயர்தரப் பரீட்சைக்கு தோற்றியுள்ள 5 மாணவர்கள் உயரிழந்துள்ளனர்.

மேலும் ஒரு மாணவர் காணாமல் போயுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இன்று பரீட்சை நிறைவந்த பின்னர் ,தினேஸ் என்ற மாணவரின் பிறந்த நாளை கொண்டாடுவதற்காக 7 மாணவர்கள் இணைந்து மண்டைத்தீவு பிரதேசத்திற்கு சென்று படகு சவாரி செய்துள்ளனர்.

பகுதியளவில் சேதமடைந்திருந்த படகொன்றிலேயே குறித்த மாணவர்கள் படகு சவாரி செய்துள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

இதன்போது , குறித்த படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதன்போது , ஒரு  மாணவர் நீந்தி கரை திரும்பியுள்ள நிலையில் , மற்றைய ஆறு மாணவர்களில் ஆறு மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

இன்றைய தினம் பிறந்தநாளை கொண்டாடும் தினேஷ் என்ற மாணவரே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

குறித்த மாணவர்கள் மது அருந்தி இருந்தாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சடலங்கள் தற்போதைய நிலையில் , யாழ். மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.