குவைத் நாட்டில் ஒரு இலங்கை பிரஜையும் ஒருவரினதும் இரு இந்திய பிரஜைகளினதும் சடலங்கள் மீட்பு!!

குவைத்தின் ரவ்டா பகுதியில் 26 வயது இந்தியப் பிரஜை ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். அப் பகுதியில் உள்ள இல்லத்தில் சாரதியாக பணிபுரியும் இவர் அறையின் கூரையில் கயிற்றை கட்டி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதேவேளை ஸ்ரீலங்காவைச் சேர்ந்த 40 வயதான நபரொருவரினதும் மற்றொரு ஆசிய நாட்டவரினதும் சடலங்கள் சுலைபிகாட்(Sulaibikhat) பகுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளன.

மூச்சுத்திணறலினால் இந்த மரணங்கள் நிகழ்ந்துள்ளதாக ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இந்த மரணங்களின் காரணத்தை தீர்மானிக்க வழக்கு தொடரப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்

No comments

Powered by Blogger.