கேப்டன் பதவியில் இருந்து டி வில்லியர்ஸ் விலகல்!

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் டி வில்லியர்ஸ். கடந்த ஆறு வருடங்களாக தென் ஆப்பிரிக்க ஒருநாள் போட்டிகளுக்கு கேப்டனாகச் செயல்பட்டு வந்தவர், திடீரென கேப்டன் பதவியில் இருந்து விலகியிருக்கிறார். தற்போது ஓய்வில் இருக்கும் அவர், வருகிற அக்டோபர் மாதம் முதல் மீண்டும் அணிக்கு திரும்புவதாகவும், கேப்டனாக யார் நியமிக்கப்பட்டாலும் அவருடைய தலைமையின் கீழ் சிறப்பாக விளையாடுவேன் என்பதை தனது ட்விட்டர் கணக்கில் வீடியோவாகப் பதிவு செய்திருக்கிறார்.

சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற சாம்பினஸ் டிராபி தொடரில் டி வில்லியர்ஸ் தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணி மோசமான பின்னடைவைச் சந்தித்தது. தவிர, டி வில்லியர்ஸின் கேப்டன்ஷிப் மீதும் விமர்சனங்கள் எழுந்தது. ‘என் மீதான கருத்துகளுக்கு நான் பதில் சொல்லவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன். தென் ஆப்பிரிக்கா அணிக்காக விளையாடுவது எனது பெருமை. வருகிற அக்டோபர் மாதம் அணிக்கு திரும்பி, டெஸ்ட், டி20, ஒருநாள் என மூன்று விதமான போட்டிகளிலும் திறமையாக விளையாட கவனம் செலுத்துவேன்!’ எனத் தெரிவித்திருக்கிறார், ஏ பி டி வில்லியர்ஸ்.

தென் ஆப்பிரிக்கா டி-20 மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கு டூ பிளெஸிஸ் கேப்டனாகச் செயல்பட்டு வருகிறார். அவரே ஒருநாள் போட்டிகளுக்கும் கேப்டனாகத் அறிவிக்கபடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments

Powered by Blogger.