மட்டு-தாந்தாமலை இறுதி திருவிழா காண செல்லும் பக்தர்களுக்கு வம்மியடியூற்றில் அன்னதானம்!(படங்கள் இணைப்பு)

நாளைய தினம் மட்டு- தாந்தாமலை ஆலய தீர்த்தோற்சவமும் நிறைவையும் முன்னிட்டு இன்றைய இறுதி திரு விழாவினை காண பல்லாயிக்கணக்கான பக்தர்கள் பாத யாத்திரையாகவும் வாகனங்கள் மூலமாகவும் பிரயாணங்களை மேற்கொண்ட வண்ணமிருக்கிறார்கள் அவர்களது தாகத்தை தீர்த்து பசியினைப் போக்க நாற்பதாம் கிராம வம்மியடியூற்று(ஊத்து வாடி) உறவுகள் சேர்ந்து மிகப் பெரிய பக்தி பூர்வமாக ஆலய தரிசனத்திற்கு செல்லும் பக்தர்களுக்கு அற்புதப் பிள்ளையாரடியில் அன்னதானம் வழங்கிக் கொண்டிருக்கின்றனர்.

ஒவ்வொரு வருடமும் தவறாது இந்த அன்னதான நிகழ்வு இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.