இரண்டுதலைப் பாம்பு இலங்கையில் கண்டுபிடிப்பு!

இலங்கையின் வடமேற்கே புத்தளம் மாவட்டம், சிலாபம் - பங்கதெனிய பிரதேசத்தில் இரண்டு தலையுள்ள பாம்பு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த பாம்பு அந்தப் பகுதியை சேர்ந்த நபர் ஒருவரால் பிடிக்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த இந்தப் பாம்பு ஆறு அடி நீளம் கொண்டது எனவும் யாராலும் இதுவரை பார்க்கப்படாத பாம்பு எனவும் பிடிக்கப்பட்டவரால் கூறப்பட்டுள்ளது.

அந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த மக்களால் குறித்த பாம்பு ஆர்வமாகப் பார்க்கப்பட்டுள்ளதோடு புதுமையான பாம்பாக இருப்பதனால் தற்பொழுது தெஹிவளை மிருகக்காட்சி சாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.No comments

Powered by Blogger.