இலங்கை- கிரிக்கட் துறையில் விரைவில் பாரிய மாற்றம் ஏற்படும்! இது சம்பந்தமாக வேலைத்திட்டமும் முன்னெடுப்பு!!

ஸ்ரீலங்கா கிரிக்கெட் துறையின் எதிர்கால நலன் கருதி கிரிக்கெட்டுடன் தொடர்புடைய சகல தரப்பினரதும் ஆலோசனையைப் பெற்று வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக, விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக நடைபெறவுள்ள செயலமர்வில் இத்துறையுடன் தொடர்புடைய அனைத்து தரப்பினரும் கலந்துகொள்ளவேண்டும் என்று அமைச்சர் அழைப்பு விடுத்துள்ளார்.

அரசியல் நோக்கத்துடன் தாம் இதனை நடத்தவில்லை என்று குறிப்பிட்டுள்ள அவர், இங்கு முன்வைக்கப்படும் ஆலோசனைகளின் அடிப்படையில் அறிக்கை ஒன்று தயாரிக்கப்படவுள்ளதாகவும் கூறியுள்ளார்.

ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் மேம்பாடு தொடர்பில் வீதியில் கதைப்பதால் எந்தவித பயனும் ஏற்படாது என்றும் விமர்சனங்களை முன்வைப்போர் அதற்கான ஆலோசனைகளை இந்த செயலமர்வில் சமர்ப்பிக்கமுடியும் என்றும் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

முன்னாள் கிரிக்கெட் சபை உறுப்பினர்கள், கிரிக்கெட் வீரர்கள், புத்திஜீவிகள் மற்றும் கிரிக்கெட்டில் ஆர்வமுள்ள ஊடகவியலாளர்கள் ஆகியோர் இதில் கலந்துகொள்ளலாம் என்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் அழைப்பு விடுத்துள்ளார்.

No comments

Powered by Blogger.