டி.டி.வி.தினகரன் - விஷால் திடீர் சந்திப்பு!

அ.தி.மு.க. அம்மா கட்சியின் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரனை, நடிகர் சங்கப்பொதுச்செயலாளர் விஷால் இன்று திடீரென சந்தித்து பேசினார்.


விஷாலின் தங்கை ஐஸ்வர்யாவுக்கும் பிரபல உம்மிடி நகைக்கடை குடும்பத்தைச் சேர்ந்த உம்மிடி கிருத்திஷுக்கும் வரும் 27-ம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. இதனால், தங்கையின் திருமணத்துக்காக பத்திரிகைகளைக் கொடுத்துவருகிறார், விஷால். இந்தத் திருமணத்தில், சினிமா பிரபலங்கள் தவிர அரசியல் பிரபலங்களும் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

சமீபத்தில்கூட வைக்கோவை சந்தித்து பத்திரிகை கொடுத்தார் விஷால். இந்நிலையில், தற்போது டி.டி.வி.தினகரனை அவரது இல்லத்தில் சந்தித்து, தங்கையின் திருமணத்துக்காகப் பத்திரிகை கொடுத்துள்ளார்.

No comments

Powered by Blogger.