துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்! - புதிய அமைச்சரவை பட்டியல் வெளியீடு

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம் நியமிக்கப்பட்டுள்ளார். அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளராக முதலமைச்சர் பழனிசாமி நியமிக்கப்பட்டுள்ளார். புதிய அமைச்சரவையில் பன்னீர்செல்வத்துக்கு நிதித்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் துணை முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் நியமிக்கப்பட்டுள்ளார். 
பழனிசாமி - பன்னீர்செல்வம் சந்திப்பு : ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் பிரிந்த அணிகள் தற்போது இணைந்தன. எடப்பாடி பழனிசாமியும் பன்னீர்செல்வமும் கைக்குலுக்கினர். அணிகள் இணைந்ததை அதிமுக தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். 
இணைப்பு உறுதி : புதிய அமைச்சர்கள் பதவியேற்பு விழா இன்று மாலை 4.30 மணிக்கு நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு விழா நடைபெறவுள்ளதாம்.

அதிமுக தலைமை அலுவலகத்தில் தரையை தொட்டு வணங்கினார் பன்னீர்செல்வம்!
அதிமுக தலைமை அலுவலகத்துக்கு பிற்பகல் 2.22 மணிக்கு ஓ.பன்னீர்செல்வம் வந்தடைந்தார். அப்போது, கையெடுத்து மேலே கும்பிட்ட பன்னீர்செல்வம், பின்னர் கையை தரையில் வைத்து வணங்கினார். இதையடுத்து, பலத்த பாதுகாப்புடன் உள்ளே சென்றார் பன்னீ்ர்செல்வம்.


இன்னும் சற்று நேரத்தில் இணைகிறது பழனிசாமி- பன்னீர்செல்வம் அணி!
பழனிசாமி- பன்னீர்செல்வம் அணியினர் இன்னும் சற்று நேரத்தில் இணையப்போகிறது. அதிமுக தலைமைக் கழகத்தில் முதல்வர் காத்திருக்கும் நிலையில், பன்னீர்செல்வம் தனது அணியின் முக்கிய நிர்வாகிகளுடன் தலைமைக்கழகம் புறப்பட்டுள்ளார்.
*ஓ.பன்னீர்செல்வம் அணி தலைமை அலுவலகம் வந்துவிட்டனர். ஓ.பன்னீர்செல்வத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அதிமுக தலைமை அலுவலகத்துக்கு புறப்பட்டுவிட்டதாக ட்வீட் செய்யப்பட்டுள்ளது. எனவே இன்று அணிகள் இணைப்பு உறுதியாக நடக்கும் எனத் தெரிகிறது.

No comments

Powered by Blogger.