அம்பாறை திராய்க்கேணி படுகொலையின் நினைவேந்தல் நிகழ்வு

துறையூர் தாஸன்.

வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுக்கூட்ட ஏற்பாட்டாளர் க.லவகுவராசாவின் ஏற்பாட்டில்,அம்பாறை மாவட்ட அட்டாளைச்சேனை பிரதேச செயலக் பிரிவுக்குட்பட்ட திராய்க்கேணி பிரதேசத்தில்1990 ஆம் ஆண்டு 52 அப்பாவி தமிழ்மக்கள் இனவெறி காடையர்களினால் படுகொலை செய்யப்பட்டதன்,27 ஆவது ஆண்டு நினைவு நினைவேந்தல் நிகழ்வு, திராய்க்கேணி முத்துமாரியம்மன் ஆலயத்துக்கு அருகாமையிலுள்ள வளாகத்தில் இன்று(25) இடம்பெற்றது.

உயிர் நீத்த உறவுகளுக்காக ஐம்பத்திரெண்டு சுடர் ஏற்றப்பட்டு மெளன இறைவணக்கமும் இடம்பெற்றது.அதனையடுத்து திராய்க்கேணி ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில்,விசேட பூசை ஆராதனைகளும் வழிபாடுகளும் அன்னதானமும் இதன்போது இடம்பெற்றது.

இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட இளைஞர் அணித் தலைவரும் சமூக சேவையாளருமாக கி.ஜெயசிறில்,அட்டாளைச்சேனை பிரதேச செயலக செயலாளர் ரீ.ஜெ. அதிசயராஜ்,திராய்க்கேணி கிராம நிலதாரி கா.நல்லரெட்ணம்,மாதர் அபிவிருத்தி சங்கங்கள்,உயிர் நீத்தவர்களின் உறவுகள் ஆகியோர் இதன்போது கலந்துகொண்டனர்.


No comments

Powered by Blogger.