திருகோணமலையில் கால் பதிக்கும் ஜப்பான்!

திருகோணமலை மாவட்ட அபிவிருத்தியில் பங்கெடுக்க ஜப்பான் ஆர்வம் கொண்டுள்ளதாக இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் கெனிச்சி சுகனுமா தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாகாண ஆளுநர் ரோகித போகொல்லாகமவுடன் இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இந்த சந்திப்பின் போது கிழக்கு மாகாண சமூக, பொருளாதார அபிவிருத்தி தொடர்பாகவும், திருகோணமலை நகரின் அபிவிருத்தி தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை அபிவிருத்தி தொடர்பான திட்டங்களை வரைய ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் சிங்கப்பூருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த திட்டத்தில் பங்கெடுக்க ஜப்பானும் விருப்பம் கொண்டுள்ளதாக இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.