மின்னல் வேகத்தில் தரவிறக்கம் செய்யக்கூடிய புத்தம் புதிய மொடெம்!

இணைய வேகம் அதிகரிக்கப்படுவதையே இணையப் பாவனையாளர்கள் அதிகம் விரும்புகின்றனர்.
இதனைக் கருத்திற்கொண்டு 5G இணைய தொழில்நுட்பம் தற்போது பரிசோதனையில் காணப்படுகின்றது.

இந்நிலையில் சாம்சுங் நிறுவனம் அதி வேகத்தில் டேட்டாக்களை தரவிறக்கம் செய்யக்கூடிய LTE மொடம் ஒன்றினை அறிமுகம் செய்துள்ளது.

இச் சாதனமானது அதிகபட்சமாக 1.2 Gbps எனும் வேகத்தில் தரவிறக்கத்தினை மேற்கொள்ளவல்லது.

ஏற்கனவே 1 Gbps எனும் தரவிறக்க வேகம் காணப்படும் நிலையில் தற்போது 20 சதவீத அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இத் தொழில்நுட்பமும் 5G இணையத் தொழில்நுட்பத்தின் ஒரு புரட்சியாகவே கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.