நாவிதன்வெளி பிரதேசத்திற்கு புதிய பிரதேச செயலாளர்!


                                                                                                       - துறையூர் தாஸன் -
நாவிதன்வெளி பிரதேச செயலகத்தின் புதிய பிரதேச செயலாளராக சோ.ரங்கநாதன் நேற்று முன்தினம் முதல் (21) தனது கடமையை பொறுப்பேற்றுக்கொண்டார்.

மண்முனை தென் எருவில் பற்று களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகத்தில் பதில் பிரதேச செயலாளராக கடமையாற்றி வந்த நிலையிலேயே குறித்த இடமாற்றம்
பொதுச் சேவை ஆணைக்குழுவினால்,இலங்கை நிர்வாக  சேவை தரம் -01 இல் பதவி உயர்வு பெற்று நாவிதன்வெளி பிரதேச செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஓட்டமாவடி,செங்கலடி மற்றும் களுவாஞ்சிக்குடி ஆகிய பிரதேச செயலகங்களில் உதவி பிரதேச செயலாளராகவும் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் உதவி மாவட்ட செயலாளராகவும் கடமையாற்றியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.