மட்டு-களுதாவளையில் விபத்து!!இளைஞன் சம்பவ இடத்திலேயே பலி!!!

மட்டக்களப்பு-கல்முனை பிரதான வீதியில் களுதாவளை பகுதியின் பாதசாரிக் கடவையின் அருகிலே இன்று காலை இடம்பெற்ற விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த இளைஞன், முன்னே சென்ற பிக்கப் ரக வாகனத்தை முந்திச் செல்ல முற்பட்ட வேளையில், அந்த வாகனத்தில் மோதி கீழே வீழ்ந்த போது, எதிரே வந்த தனியார் பஸ்ஸொன்று, மோட்டார் சைக்கிளுக்கு மேல் ஏறியமையால், இவ்விபத்துச் சம்பவித்துள்ளது.

இதில் உயிரிழந்தவர், களுதாவளையைச் சேர்ந்த 22 வயதுடைய ம.இதயராஜ் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சடலம் தற்போது களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. பேரூந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ் இளைஞன் பயணித்த மோட்டார் சைக்கிள் முற்றாக சேதமடைந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments

Powered by Blogger.