மாபெரும் மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டி.

(துறையூர் தாஸன்)
துறைநீலாவணை கிராமத்தின் கல்வி மற்றும் அபிவிருத்திக்காக அரும்பாடுபட்டவரும் மத்திய விளையாட்டு கழகத்தின் முன்னோடிகளில் ஒருவருமான அமரர் வேலுப்பிள்ளை நாகேந்திரனின் 38 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டும் கழகத்தின் வருட(45) பூர்த்தியையும் முன்னிட்டு,வருடா வருடம் நடாத்தப்பட்டு வரும் நாகேந்திரன் நினைவு கிண்ண மாபெரும் மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் இறுதிப் போட்டி துறைநீலாவணை பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி நகுலேஸ்வரி புள்ளநாயகம்,திருமதி நாகேந்திரன் நேசமணி,மட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலக விதாதா வள நிலைய அலுவலர் நா.புள்ளநாயகம்,ஆசிரியர் சர்வேஸ்வரன்,சமுர்த்தி உத்தியோகத்தர் த.விநாயகமூர்த்தி,சிறுவர் நன்னடத்தை அபிவிருத்தி உத்தியோகத்தர் சி.தயாளன்,ஆகியோர் இதன்போது அதிதிகளாக கலந்து கொண்டனர்.

கோட்டைக்கல்லாறு திருவள்ளுவர் விளையாட்டுக் கழகத்திற்கும் துறைநீலாவணை மத்திய விளையாட்டு கழகத்திற்குமான அரையிறுதிப் போட்டியில், துறைநீலாவணை மத்திய விளையாட்டுக் கழகம் வெற்றிக் கிண்ணத்தை தனதாக்கிக் கொண்டது.

இரண்டாம் இடத்தை சவீகரித்த கோட்டைக்கல்லாறு திருவள்ளுவர் விளையாட்டுக் கழகத்தினருக்கு பத்தாயிரம் ரூபாய் பணப்பரிசும் வெற்றிக்கிண்ணமும் நாகேந்திரன் புள்ளநாயகத்தினாலும் முதலாம் இடத்தை தட்டிக்கொண்டவர்களுக்கான இருபதாயிரம் ரூபா பணப் பரிசு, வெற்றிக் கிண்ணம் ஆகியவை திருமதி நாகேந்திரன் நேசமணியினாலும் வழங்கி வைக்கப்பட்டது.No comments

Powered by Blogger.