யாழ் தொடருந்து நிலையத்தில் அரை நிர்வாண நிலையில் பிக்கு! தீவிர விசாரணையில் பொலீசார்!!

மொனராகலையில் உள்ள பிக்கு ஒருவர் மனநிலை குழம்பிய நிலையில் யாழ்ப்பாணம் தொடருந்து நிலையத்துக்கு அருகில் உள்ள தண்டவாளத்தில் அரை நிர்வாண நிலையில் இருந்து மீண்டு பின்னர் யாழ் பொலிஸ் நிலையத்தில் தஞ்சமடைந்துள்ளார்.

குறித்த 17 வயதுடைய பிக்கு மொனராகலையில் உள்ள ஒரு பௌத்த பீடத்தில் கற்று வருவதாகவும் நேற்று முன்தினம் தான் திடீரென நினைவிழந்து காணப்பட்டதாகவும்.

பின்னர் நேற்றைய தினம் காலை யாழ் ரயில் நிலையத்துக்கு இருகில் இருந்த தண்டவாளத்தில் ஆடைகள் அற்ற நிலையில் இருந்தததை உணர்ந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

பின்னர் தான் அருகில் உள்ள வீட்டுக்கு சென்று ஆடை ஒன்றை பெற்று அணிந்து கெண்டதாகவும் அங்கிருந்து யாழ் பொலிஸ் நிலையத்தில் தன்னை கொண்டு சென்று சேர்த்து விடுமாறு கோரிய போது அவரை யாழ் பேருந்து நிலையத்தில் கொண்டு வந்து சிலர் விட்டு விட்டு சென்றுள்ளனர் என்றும் தான் பின்னர் வேறு நபர்களிடம் விசாரித்து பொலிஸ்நிலையத்துக்கு வந்ததாகக பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

இவருடைய பெற்றோர் மற்றும் விகாராதிபதிக்கு தகவல் வழங்கப்பட்டதையடுதது அவர்கள் குறித்த பிக்குவை அழைத்து செல்வதற்காக யாழ்ப்பாணத்துக்கு இன்றைய தினம் வரவுள்ளனர்.

No comments

Powered by Blogger.