விடுமுறைக்கு சென்று கடமைக்கு திரும்பாத இராணுவ அங்கத்தவர்கள் கைது!!

ஸ்ரீலங்கா இராணுவ பொலிஸ் மற்றும் ஸ்ரீலங்கா பொலிஸார் இணைந்து நாடு முழுவதும் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் 777 இராணுவ அங்கத்தவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

விடுமுறையில் சென்ற நிலையில் மீண்டும் கடமைக்கு திரும்பாத இராணுவ அங்கத்தவர்களே இவ்வாறு கடந்த வெள்ளிக்கிழமை கைதுசெய்யப்பட்டுள்ளதாக, இராணுவ தலைமையகம் தகவல் வெளியிட்டுள்ளது.

இவ்வாறு கைதுசெய்யப்பட்ட இராணுவத்தினருள் இராணுவ அதிகாரி ஒருவரும் 776 படை வீரர்களும் உள்ளடங்கியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த சோதனை நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இராணுவ தலைமையகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.