பன்னீர்- எடப்பாடி அரசுக்கு அதிர்ச்சி கொடுக்கும் கருணாநிதியின் மகன்!

கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழக அரசாங்கமானது மந்த நிலையில் செயற்பட்டு வருகின்றது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா திடீர் உடல் நலக் கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அதனையடுத்து, கடந்த மார்கழி மாதம் அவர் மாரடைப்பினால் உயிரிழந்தார். அன்று முதல் தமிழக அரசாங்கம் பெரும் நெருக்கடிகளையும், பிளவுகளையும் சந்தித்து வருகிறது.

அதுமாத்திரமல்லாது, அவர் மரணமடைவதற்கு முன்னர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கும் அவருக்கு தண்டனை கொடுக்கப்பட்டதும் தமிழக அரசியலில் பெரும் சிக்கலை உண்டுபண்ணியது.

எனினும், அதனைத் தொடர்ந்து, அவர் சிறையில் இருந்து மீண்ட பொழுதும், அவரின் உடல் நிலையில் பிரச்சினைகள் இருந்ததாகவும், பல அபிவிருத்திப் பணிகளுக்கான திட்டங்கள் பிற்போடப்பட்டிருந்தன.

இந்நிலையில், அப்பல்லோ மருத்துமனையில் அவர் மரணடைந்த நிலையில், முதலமைச்சர் பதவியை ஏற்றுக் கொண்ட ஓ. பன்னீர்செல்வம் முதல்வராக பதவியேற்க, பின்னர் அவரும் நெருக்கடியால் தன்னுடைய பதவியை துறந்தார்.

இதனையடுத்து, தனக்கான நெருக்கடிகளை அவர் ஜெயலலிதா சமாதியில் தியானத்தில் ஈடுபட்ட பின்னர் வெளிப்படுத்தினர்.

அவரின் இந்த அறிவிப்பால் தமிழக அரசியல் பரபரப்படைந்தது. ஆனாலும் சசிகலா தரப்பினர் எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக்கினார்கள்.

இருப்பினும் அவருக்கு பெரும்பான்மை இல்லை என்றும், அவர் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்றும் பன்னீர்செல்வம் ஆதரவாளர்களும், திமுக தரப்பினரும் கோரிக்கை விடுக்க, சட்டமன்றத்தில் விசேட அமர்வின் போது எடப்பாடி தரப்பு பெரும்பான்மையை நிரூபிக்க, சட்டமன்றத்தில் அமளி ஏற்பட்டது.

அதற்கு முன்னர் கூவத்தூரில் சட்டமன்ற உறுப்பினர்களை அடைத்து வைத்த நிகழ்வுகளும் நிகழ்ந்ததை தமிழக மக்கள் எளிதில் மறந்திருக்க மாட்டார்கள்.

எவ்வாறாயினும் எடப்பாடி பழனிச்சாமி பொறுப்பேற்ற போது, பன்னீர்செல்வம் அணியானது தர்ம யுத்தம் தொடரும் என்று அறிவித்தது. ஆனாலும் கடந்த வாரம் இரண்டு அணியும் ஒன்றாகின. துணை முதல்வரானார் பன்னீர்செல்வம்.

இந்தநிலையில் தான் மீண்டும் பெரும் இக்கட்டான சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது பன்னீர் எடப்பாடி தலைமையிலான அதிமுக அரசு.

தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் 19பேர் தாம் எடப்பாடி மீது நம்பிக்கை இழந்துள்ளதாகவும், அவருக்கான ஆதரவை தாம் திரும்பிப் பெறுவதாகவும் அறிவித்துள்ளனர்.

இதனையடுத்து, திமுகவின் செயல் தலைவர் மு. ஸ்டாலின் ஆளுநருக்கு கடிதம் அனுப்பியிருந்தார். எடப்பாடி- பன்னீர் அரசுக்கு பெருமபான்மையில்லை என்றும் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவு இடுமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.

இது பெரும் சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது அதிமுகவினருக்கு. இந்த 19 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவும் இல்லாமல் போகுமாயின் எடப்பாடி பன்னீர் ஆட்சி கலையும் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

எதுவாயினும், இன்னும் சில நாட்களில் குடியரசுத் தலைவர் ஆட்சி தமிழகத்தில் வரும் என்கிறார்கள் விசயமறிந்த தரப்பினர்.

No comments

Powered by Blogger.