உயர்தர பொது அறிவுப் பரீட்சை ஒத்திவைப்பு

எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 2ஆம் திகதி இடம்பெறவிருந்த கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் பொது அறிவு பாடத்துக்கான பரீட்சையை, 3ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடத்துவதற்கு, கல்வியமைச்சு தீர்மானித்துள்ளது என, கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார்.
எதிர்வரும் 2ஆம் திகதி, முஸ்லிம்கள் ஹஜ் பெருநாள் தினத்தை கொண்டாடுவதால், அன்று இடம்பெறவிருந்த மேற்குறிப்பிட்ட பாடத்துக்கான பரீட்சையைப் பிற்போடுமாறு, அமைச்சர் ரிஷாட் பதியுதீன், எழுத்து மூலம் விடுத்த வேண்டுகோளை ஏற்றே, தாம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாக, அமைச்சர் அகிலவிராஜ் அறிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.