இன்று ஐந்தாம்தர புலமைப்பரிசில் பரீட்சை நாடளாவிய ரீதியில் சுமுகமாக நடைபெற்று முடிந்துள்ளது!

                                                                                                                                                                                                                                                                - செ.துஜியந்தன் -
மட்டக்களப்பு மண்முனைப்பற்று  புதுக்குடியிருப்பு கிராமத்தில் புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றிவிட்டு  மகிழ்ச்சியோடு பரீட்சை மண்டபத்தை விட்டு வெளியேறி வருவதனை இங்கே காணலாம்.

ஐந்தாம் தர  புலமைப் பரிசில்  பரீட்சைக்கு இம் முறை   2 இலட்சத்து 56 ஆராயிரத்து 700 மாணவர்கள்  தோற்றி இருந்தனர். பரீட்சைக்கென 3017 பரீட்சை நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டிருந்தன 

பரீட்சை நடைபெற்றபோது   பரீட்சை மண்டபம் அமைந்துள்ள பாடசாலை வளாகத்தினுள் மாணவர்களின் பெற்றோர், ஆசிரியர்கள் செல்வதும் நடமாடுவதும் முற்றாக தடை செய்யப்பட்டிருந்தது. 

புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் திருத்தும் பணிகள் இம் மாதம் 30 ஆம் திகதி தொடக்கம் செப்டெம்பர் 12 ஆம் திகதி வரை நடைபெறும் என பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது.0/Post a Comment/Comments

Previous Post Next Post