துறைநீலாவணையில் ஊடகவியலாளர் க.விஜயரெத்தினம் என்பவரை கொலை செய்ய முயற்சி!!

துறைநீலாவணைகிராமத்தைச் சேர்ந்த க.விஜயரெத்தினம் ஊடகவியாளர் அவர்களை கடந்த ஞாயிற்று கிழமை இரவு மது போதையில் மரண வீட்டுக்கு வந்த இருவரினால் தாக்குதலுக்கு உட்படுத்தி கொலைசெய்ய முயற்சித்துள்ளதாக ஊடகவியலாளர் க.விஜயரெத்தினம் தெரிவித்தார்.இது சம்பந்தமாக களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்திலும், மட்டக்களப்பு மனித உரிமை ஆணைக்குழுவிலும் தனது முறைப்பாடை பதிவு செய்திருக்கின்றார்.

இது சம்பந்தமாக நீதியான தீர்ப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காகவும் பொலிஸ் பொறுப்பதிகாரியிடமும் மனித உரிமை ஆணையாளரிடமும் கோரிக்கை முன் வைத்துள்ளார்.

இது சம்பந்தமாக அவர் குறிப்பிடுகையில் ...

துறைநீலாவணையில்  பிறந்து வளர்ந்து தற்போது ஊடகவியலாளராக கடமையாற்றிக் கொண்டிருக்கும் எனக்கு கொலை முயற்சி ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.நண்பர் ஒருவரின் மரணவீட்டுக்கு சென்றிருந்த வேளையில் ஞாயிற்றுக்கிழமை(20.8.2017)  இரவு 8.45 மணியளவில் இக்கொலை முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

சம்பவ தினத்தன்று நான் துறைநீலாவணையில் உள்ள நண்பர் (அமரர்.விஜயலக்ஸ்மி) என்பவரின் மரண  வீட்டுக்கு சென்றிருந்தேன்.அங்கு சென்றிருந்த வேளையில் நான் தனிமையில் கையடக்க தொலைபேசியை பார்த்து கொண்டிருந்தேன்.இவ்வாறு இருக்கும் போது நிறைபோதையில் துறைநீலாவணை கிராமத்தைச் சேர்ந்த கேதாரம் வித்தியானந்தம் , குமாரசாமி தீபாகரன் (ஜீவன்)   
ஆகிய இருவரும்  வந்திருந்தார்கள்.

நான் அமைதியாக இருந்தவேளையில் எனக்கு அருகாமையில் இருந்த கதிரையை தூக்கிய தீபாகரன் என்பவர்  வெறிபோதையில் என்னைப்பார்த்து "நஞ்சுள்ளவர்கள் இங்கு வந்திருந்ததைஅறிந்திருந்தால்  நான்  இந்த மரண வீட்டிற்கு வந்திருக்க மாட்டேன்" எனக் கூறினார்.

இதனை நான் அவரிடம் கேட்டேன்.கேட்டபோது அவர் என்னை தாருமாறாக தூசனத்தில் பேசினார்.நான் அவரிடம் கூறினேன் தம்பி நஞ்சு மனம் படைத்தவர்கள் மரணவீட்டுக்கு வரமாட்டார்கள் என்று.நண்பருக்கு துதிப்பாட்டு பாடும் அவருடைய நண்பர் என்னை பார்த்து காரசாரமாக பேசினார்  இதனால் எங்களுக்கிடையில் வாய்த்தர்க்கம் உண்டாகியது. இதன்போது  வீட்டில் இருந்த கதிரைகளை வித்தியானந்தம் என்பர்  தூக்கி வீசிட்டு அருகாமையில் உள்ள வீட்டிற்கு ஓடோடிப்போய் வார்த்தடியையும்,வீட்டில் இருந்த சாராயப்போத்தலையும் உடைத்திட்டு அடிக்க வந்தார்.சுமார் நான்கு போத்தலை உடைத்து வந்தும்,போத்தலை வீதியில் எறிந்தும்,தூசனங்களை பொதுமக்கள் மத்தியில் பேசியும்  சண்டை பிடித்தார்கள்.இவ்வாறு மதுபோதையில் அட்டகாசம் செய்தவர்கள் இருவரும் ஆலயத்தின் தலைவரும்,பொருளாளரும் ஆவார்கள். .இவர்கள் இருவரும் கல்லாறு பகுதியைச் சேர்ந்த கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஒருவரின் ஆதரவாளர்கள் .

கடந்த வெள்ளிக்கிழமை (04.08.2017) அன்று  வாய் பேசத்தெரியாத என்னுடைய   பசுவை கத்தியால் இனந்தெரியாத நபர்கள் வெட்டியுள்ளார்கள். இன்று போத்தலை உடைத்து, வார்த்தடியுடன் வருகின்றார்கள். நாளை நமக்கு சவப்பெட்டிதான்...எனக்கும் எனது தொழிலுக்கும், ஊடக சுதந்திரத்திற்கும் விடுக்கப்பட்ட சவாலாகவும் கொலை முயற்சியாகவும் நான் கருதுகின்றேன்.

 மரண வீட்டில் இருந்த நண்பர்களின் உதவியுடனும், வீட்டுக்காரர்களின் உதவியுடனும்  நான் தெய்வாதீனமாக காப்பாற்றப்பட்டேன்.

இவ்விடயமாக திங்கட்கிழமை (21.08.2017) நான் களுவாஞ்சிகுடி பொலிசிலும், மட்டக்களப்பு மனித உரிமை ஆணைக்குழுவிலும் முறைப்பாடுகளை  பதிவு செய்துள்ளேன். 

No comments

Powered by Blogger.