களுவாஞ்சிக்குடி மஹாவிஸ்னு தேவஸ்தன வருடாந்த மஹோற்சவம்

(துறையூர் தாஸன்)

மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட களுவாஞ்சிக்குடி அருள்மிகு ஸ்ரீதேவி,பூமிதேவி சமேத வெங்கடேஸ்வர மஹாவிஸ்னு தேவஸ்தன வருடாந்த மஹோற்சவம் இன்று(20) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 29 ஆவது தேதி இடம்பெறவுள்ள சமுத்திர தீர்த்தோற்சவத்துடன் நிறைவுபெறவுள்ளது.

27 ஆம் தேதி வேட்டைத்திருவிழாவும் 29 ஆம் திகதி சங்காபிசேகமும் சமுத்திர தீர்த்தோற்சவமும் 30 ஆம் தேதியிரவு பூங்காவன உற்சவமும் 31 ஆம் திகதியிரவு திருக்கல்யாணமும் 01 ஆம் தேதி பகல் பிராயச்சித்த அபிசேகமும் வைரவர்,ஆஞ்சனேயர் பூசையும் இடம்பெறவுள்ளது.

சிவாகம ஞானபானு,கிரியா திலகம் சிவஸ்ரீ சு.சுதர்சன் குருக்கள் தலைமையில் சர்வ போதக சர்வசாதகாசிரியர் சாதகவாரி சிவஸ்ரீ க.கு.திவிசாந்தசர்மா,சிவஸ்ரீ சி.ஸ்ரீகரக் குருக்கள்,சிவஸ்ரீ த.ரதிகர சர்மா,சிவஸ்ரீ ச.கு.சதிஸ் சர்மா ஆகியோர் உற்சவ கால குருமார்களாக செயற்படவுள்ளனர்.


No comments

Powered by Blogger.