தெற்கு சீனா வெள்ளக்காடா­னது ; ஹொங்கொங் நகரை சூறை­யா­டிய ஹாட்டோ புயல்

ஹொங்கொங் நகரை நேற்று சுழற்­றி­ய­டித்த ஹாட்டோ புயலால் மக்­களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்­கப்­பட்­டுள்­ளது. இராட்­சத அலை­களின் எழுச்­சியால் தெற்கு சீனா வெள்­ளக்­கா­டா­னது. 

ஆசி­யாவின் பொரு­ளா­தார மையம் என அழைக்­கப்­படும் ஹொங்கொங் நகரை நேற்று பத்தாம் எச்­ச­ரிக்கை எண் கொண்ட ஹாட்டோ புயல் தாக்­கி­யது. மணிக்கு 155 கிலோ­மீற்றர் வேகத்தில் தாக்­கிய இந்த பெரும்­பு­யலால் கடல் அலைகள் சீற்­றத்­துடன் நகர வீதி­க­ளுக்குள் பாய்ந்து மோதின.

புயலின் வேகத்­துக்கு ஈடு­கொ­டுக்க முடி­யாமல் பல மரங்கள் வேரோடு சாய்ந்­ததால் சாலை­களில் போக்­கு­வ­ரத்து முற்­றி­லு­மாக பாதிக்­கப்­பட்­டுள்­ளது. ஹொங்­கொங்கின் மக்காவ் நகரில் பல்­வேறு வங்­கிகள், அலு­வ­ல­கங்கள், கடைகள் உள்­ளிட்ட வர்த்­தக நிறு­வ­னங்கள் அனைத்தும் மூடிக் கிடக்­கின்­றன. சாலையில் சென்ற கார்கள் வெள்­ளத்தில் சிக்கி பாதி உய­ரத்­துக்கு நீரில் மூழ்கி காணப்­ப­டு­கின்­றன. 

விக்­டோ­ரியா துறை­முகம் பகு­தியில் ஆவே­ச­மாக மோதிய கடல் அலைகள், ஆர்ப்­ப­ரித்துக் கொண்டு அரு­கா­மையில் உள்ள சாலை­களை வெள்­ளக்­கா­டாக மாற்­றி­யது. குறிப்­பாக, தாழ்­வான தீவுப்­ப­கு­தி­யான ஹெங் ஃபா சுவேன் நகரம் முழு­வ­தையும் வெள்­ளநீர் சூழ்ந்­துள்­ளது. பல மரங்கள் முறிந்து கட்­ட­டங்­க­ளின்­மீது சாய்ந்து கிடக்­கின்­றன. மின்­சார இணைப்பு துண்­டிக்­கப்­பட்­டுள்­ளதால் மக்கள் பெரும் அவ­திக்­குள்­ளாகி வீடு­க­ளுக்­குள்­ளேயே முடங்கி கிடக்­கின்­றனர். ஹொங்கொங் விமான நிலையம் மூடப்­பட்­டுள்­ளது. சுமார் 450 விமானச் சேவைகள் இரத்து செய்­யப்­பட்­டுள்­ளது. இந்த கோரப் புயலின் தாக்­கத்தால் பியர்ல் ஆற்­றங்­க­ரையை ஒட்­டி­யுள்ள பகு­தி­களில் மட்டும் மூன்­றுபேர் பலி­யா­ன­தா­கவும், முப்­ப­துக்கும் அதி­க­மா­ன­வர்கள் படு­கா­ய­ம­டைந்­த­தா­கவும் முதல்­கட்ட தகவல் வெளி­யா­கி­யுள்­ளது. 

ஹாட்டோ புயலின் தாக்கம் மக்காவ் நக­ரை­யொட்­டி­யுள்ள சீனாவின் தெற்கு பகு­தி­யி­லுள்ள குவாங்டாங் மாகா­ணத்­தையும் பதம் பார்த்­தது.  குறிப்­பாக, மக்காவ் நக­ரை­யொட்­டி­யுள்ள சீனாவின் ஸுஹாய் நக­ரத்­துக்குள் வெள்ளம் புகுந்­துள்­ளது. 

இதனால், சாலை போக்­கு­வ­ரத்து வெகு­வாக பாதிக்­கப்­பட்­டுள்­ளது. ரயில் சேவைகள் நிறுத்தி வைக்­கப்­பட்­டுள்­ளன. இங்­குள்ள ஷென்ஸென் விமான நிலை­யத்தை வெள்ளம் சூழ்ந்­துள்­ளது. இதனால், இந்­ந­கரை இணைக்கும் அனைத்து விமானச் சேவை­களும் இரத்து செய்­யப்­பட்­டுள்­ளது.


No comments

Powered by Blogger.