இலங்கை - இந்திய கிரிக்கெட் போட்டியில் ஏற்பட்ட பதற்றம்!

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையில் ரங்கிரி தம்புள்ளை மைதானத்தில் நேற்று இடம்பெற்ற ஒரு நாள் போட்டியின் போது குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.
கிரிக்கெட் ரசிகர்கள் மைதானத்திற்குள் பதற்றமான முறையில் நடந்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
போட்டி நிறைவடைந்து வீரர்கள் வெளியேற முயற்சித்த போது, விளையாட்டு வீரர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு எதிராக கடுமையான எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பொலிஸார் கடுமையான சிரமத்தின் பின்னர் கூட்டத்தினை கட்டுப்படுத்தி வீரர்கள் மற்றும் அதிகாரிகளை பாதுகாப்பாக அவ்விடத்தை விட்டு அனுப்பியுள்ளனர்.
கிரிக்கெட் பார்வையாளர்கள் போட்டி நிறைவடைந்தவுடன், மைதானத்திற்கு மத்தியில் சென்று ஊ கூச்சலிட்டு எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.
இந்நிலையில் பொலிஸார் தலையிட்டு மைதானத்தில் உள்ளவர்களை வெளியேற்ற நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
கிரிக்கெட் தலைவர் திலங்க சுமதிபால, அறை ஒன்றில் இருந்து மைதானத்தில் நடப்பதனை அவதானித்துக் கொண்டிருந்தார்.
ஊடகவியலாளர் சந்திப்பு நிறைவடைந்து வீரர்கள் வெளியே வர ஆயத்தமாகிய போது மைதானத்தில் நின்றவர்கள் ஊ கூச்சலிட்டு கிரிக்கெட் அதிகாரிகளுக்கு தங்கள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
அதற்கமைய இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் மற்றும் அதிகாரிகள் கடுமையான பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.

No comments

Powered by Blogger.