நரம்புக் கட்டி புற்றுநோயைக் குணப்படுத்தும் மஞ்சள்

நரம்புக் கட்டி புற்றுநோயைக் குணப்படுத்தும் தன்மை மஞ்சளுக்கு உள்ளதாக அமெரிக்க வாழ் இந்திய நிபுணர் தமாரா கண்டுபிடித்துள்ளார்.

நியூரோ பிளாஸ்டோமா எனப்படும் நரம்புக் கட்டி நோய்களால் குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர்.

இது படிப்படியாக வளர்ந்து சிறுநீரகங்கள் அருகே அட்ரீனல் சுரப்பிகளில் புற்றுநோயாக மாறுகிறது.

இதைக் குணப்படுத்துவது மிகவும் சிரமம் என கருதப்பட்டது.

இந்த நிலையில், நரம்புக் கட்டி புற்றுநோயைக் குணப்படுத்தும் தன்மை மஞ்சளுக்கு உள்ளதென ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குழந்தைகள் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நிபுணராகவுள்ள தமாரா, புற்றுநோய் மருந்துகளில் மஞ்சளை சேர்க்கலாம் என பரிந்துரைத்துள்ளார்.

No comments

Powered by Blogger.