இலங்கையில் முதலாம் திகதி முதல் அடையாள அட்டைப் படத்தில் மாற்றம்!!

எதிர்வரும் செப்டம்பர் முதலாம் திகதி முதல் விண்ணப்பிக்கப்படும் தேசிய அடையாள அட்டைகளுக்கு சர்வதேச சிவில் விமான சேவைகள் அமைப்பின் தரத்துக்குட்பட்ட புகைப்படத்தை சமர்ப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆட்பதிவு திணைக்கள ஆணையாளர் பீ. வியானி குணதிலக தெரிவித்துள்ளார்.

ஆட்பதிவு திணைக்களத்தினால் பதிவுசெய்யப்பட்ட புகைப்பட பிடிப்பு நிலையங்களில் மட்டுமே இந்த புகைப்படங்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.

அந்த புகைப்படம் 35 மில்லிமீற்றர் நீளமும், 45 மில்லிமீற்றர் அகலமும் கொண்டதாக இருக்க வேண்டும் என்றும் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.

ஆட்களின் அடையாளங்களை உறுதிப்படுத்துவதற்கான சர்வதேச ரீதியான தரநியமங்களை சர்வதேச சிவில் விமான சேவைகள் அமைப்பே மேற்கொள்ளும்.

இந்த நிலையில், இதற்கமைய புகைப்படங்களை எடுப்பதற்காக நாடாளாவிய ரீதியில் சுமார் ஆயிரத்து 700 புகைப்பட நிலையங்களின் உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எனவே, செப்டம்பர் முதலாம் திகதியின் பின்னர் தேசிய அடையாள அட்டைகளைப் பெற்றுக்கொள்வதற்காக விண்ணப்பிப்பவர்கள், இந்த அறிவித்தலுக்கு அமைய புகைப்படத்தை எடுத்து, விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும் என ஆட்பதிவு திணைக்கள ஆணையாளர் அறிவுறுத்தியுள்ளார்.

No comments

Powered by Blogger.