முச்சக்கர வண்டி விபத்து: சாரதி படுகாயம்!

மட்டக்களப்பு வலையிறவு பிரதான வீதியில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற விபத்தில் முச்சக்கர வண்டி பலத்த சேதங்களுக்குள்ளாகியதுடன் சாரதி படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வலையிறவு – வவுணதீவு பிரதான வீதியூடாக வவுணதீவு பிரதேசத்திலிருந்து மட்டக்களப்பு நோக்கி வந்த முச்சக்கரவண்டி விமானப்படை வீதி வளைவில் வேகமாக திரும்புகையில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வீதியால் சென்றவர்களால் முச்சக்கரவண்டிச் சாரதி மீட்கப்பட்டு உடனடியாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.

குறித்த விபத்து தொடர்பில் சம்பவ இடத்திற்குச் சென்ற மட்டக்களப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்துள்ளனர்.


No comments

Powered by Blogger.