பேரறிவாளன் இன்னும் சில மணிநேரங்களில் பரோலில் வெளிவரவிருக்கிறார்!!

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள்தண்டனை பெற்று 26 ஆண்டுகளாக ஜெயிலில் அடைக்கப்பட்டு தண்டனையை அனுபவித்து வரும் பேரறிவாளன் பிணையில் ஜெயிலில் இருந்து வெளியே வர தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு மற்றும் நரம்பியல் நோய்களால் பாதிக்கப்பட்டு கடந்த 16 மாதங்களாக படுத்த படுக்கையாக உள்ள தனது தந்தையை பார்க்க 30 நாட்கள் பிணையில் விட வேண்டும் என்று சிறைத் துறையினரிடம் பேரறிவாளன் மனு அளித்து இருந்தார்.

இதனை ஏற்றுக்கொண்ட தமிழக அரசு பேரறிவாளன் பிணையில் வெளியே வர இன்று, அரசாணை வெளியிட்டுள்ளது.

அரசின் இந்த முடிவுக்கு பேரறிவாளன் தாயார் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “அதிகாரப்பூர்வ அறிவிப்பு எனக்கு வரவில்லை. என் மகனை காண 26 ஆண்டுகளாக காத்திருக்கிறேன். ஒரு மாத காலம் பிணை கேட்டிருந்தேன். இதற்காக பாடுபட்ட அனைவருக்கும் நன்றி”, என கூறினார்.

No comments

Powered by Blogger.