யுத்தத்தில் உயிரிழந்த மற்றும் மாற்றுத்திறனாளிகளாக்கப்பட்ட குடும்பங்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்கல்!

திருகோணமலையினை தலைமையமாக கொண்டு இயங்கும் புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகமயப்படுத்தப்பட்ட நபர்களின் ஒன்றியத்தினால் இன்று விடுதலை யுத்தத்தில் வீரச்சாவினை தழுவிக் கொண்ட மற்றும் கை கால்கள் இல்லாமல் மாற்றுத் திறனாளிகளாக்கப்பட்ட காரைதீவில் உள்ள சுமார் இருபது வறிய குடும்பங்களுக்கு சில உதவிப் பொருட்கள் உணவுப் பொருட்கள் என்பன தொண்டு நிறுவனத்தினூடாக வழங்கி வைக்கப்பட்டுள்ளது இந்த நிகழ்வு இன்று அதாவது சனிக்கிழமை பிற்பகல் 03:00 மணியளவில் இடம்பெற்றது இன்றைய சூழலில் இவ்வாறான மனித சமூக தொண்டு அமைப்புக்களின் தொண்டு மிகப்பெரிய வரப்பிரசாதமாகும் இதே போன்ற தொடர் உதவிகள் கிடைக்குமானால் இந்த மக்களின் வாழ்வாதாரம் செழித்தோங்கும் என்பதில் ஐயமில்லை.No comments

Powered by Blogger.