குழந்தை வடிவத்தில் கடற்கன்னியா?அதிசயம்!


இந்தியாவின் உத்தரபிரதேசம், சாரான்பூரைச் சேர்ந்த 22 வயதான இளம் பெண்ணிற்கு கடற்கன்னி போன்ற தோற்றமுடைய அதிசயக் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.

கர்ப்பமாக இருந்தபோது மேற்கொள்ளப்பட்ட ஸ்கேன் பரிசோதனையில் குழந்தையின் உருவம் காணப்பட்டிருந்த போதிலும், பிரசவத்தின் பின்பு குழந்தை கடற்கன்னி போன்ற உருவத்தில் இரு கால்களும் ஒட்டியவாறு காணப்பட்டுள்ளது.

இந்நிலையில் குழந்தையைப் பார்த்த மருத்துவர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ஒட்டிப் பிறப்பவர்கள் போன்ற நிகழ்வாகவே இது இருக்கக்கூடும் எனவும் இவ்வாறானதொரு நிகழ்வை இதற்கு முன்பு கண்டிருக்க வாய்ப்பு இல்லை என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.


No comments

Powered by Blogger.