மட்டக்களப்பில், சிறுவர் செயலகத்தின் அனுசரணையில் அமைக்கப்பட்ட பகல் பராமரிப்பு நிலையம் திறந்து வைப்பு

( க.விஜயரெத்தினம்)

மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் சிறுவர் செயலகத்தின் அனுசரணையில் மட்டக்களப்பு மாவட்டத்தினால் 12 மில்லியன் செலவில் அமைக்கப்பட்ட பாடுமீன் பகல் பராமரிப்பு நிலையம் இன்றைய தினம் வியாழக்கிழமை (24) பகல் சிறுவர் செயலகப்பணிப்பாளர் திருமதி நயனா இ. சேனாரத்னவால் திறந்து வைக்கப்பட்டது.

உதவி மாவட்டச் செயலாளர் எஸ்.இநவேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில், சிறப்பு அதிதிகளாக மட்டக்களப்பு மாநகர சபை ஆணையாளர் வி.தவராஜா, மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.நெடுஞ்செழியன், மட்டக்களப்பு மாவட்ட மனித உரிமைகள் ஆணைக்குழு இணைப்பாளர் எஸ்.அசீஸ், மாவட்ட பொறியியலாளர் ரி.சுமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிகழ்வில், அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் சார்பாக சிறுவர் செயலகப்பணிப்பாளர் திருமதி நயனா இ. சேனாரத்னவுக்கான நினைவுச்சின்னத்தினை மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் வழங்கி வைத்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் அரச உத்தியோகத்திற்குச் செல்லும் பெற்றோரின் பிள்ளைகளைப் பகல் வேளையில் பராமரிக்கும் வகையில் இயங்கவுள்ள இப் பாடுமீன் பராமரிப்பு நிலையத்தில் குழந்தைகளுக்கான அனைத்து வசதி வாய்ப்புக்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

மாவட்ட செயலகத்தினால் அமைக்கப்பட்டுள்ள இந்த பகல் பராமரிப்பு நிலையம் மட்டக்களப்பு மாநகர சபையின் ஊடாக செயற்படுத்தப்படவுள்ளது.

உத்தியோகங்களுக்குச் செல்லும் பெற்றோரின் பிள்ளைகளைப் பராமரிக்கும் வகையில், காலை 6.30 மணிமுதல் மாலை 6.மணிவரையில் சனி ஞாயிறு அரச விடுமுறை தவிர்ந்த நாட்களில் இந் நிலையம் திறந்திருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய நிலையில் இவ் நிலையத்தில் 5 வயதுக்குட்பட்ட 20 குழந்தைகளைப் பராமரிக்கக்கூடிய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.