காணாமல் போன பதினைந்து வயதுடைய மாணவி காதலன் வீட்டில்!!

தனியார் மேலதிக வகுப்பிற்கு சென்ற இடைநடுவே காணாமல் போனதாக கூறப்படும் அநுராதபுரம் - பாலாடிகுளம் பிரதேசத்தை சேர்ந்த 15 வயதான பாடசாலை மாணவி களுத்துறை தெற்கு - ஹம்பேகெதர பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

அநுராதபுரம் சிறுவர் மற்றும் பெண்கள் பணியக அதிகாரிகளால் அவர் இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 2 ஆம் திகதி இந்த சிறுமி காணாமல் போனதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த மாணவி தனது தாயிற்கு கடிதம் ஒன்றை எழுதி வைத்து வீட்டை விட்டு சென்றுள்ளதாக காவற்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

எனினும் தனது மகள் காணாமல் போயுள்ளதாக முறைப்பாடு செய்துள்ள தாய், குறித்த கடிதம் தொடர்பில் காவற்துறையிடம் மறைத்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்நிலையில் அந்த மாணவி களுத்துறை - தெற்கு ஹம்பேகெதர பிரதேசத்தில் உள்ள அவரது காதலன் வீட்டில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

அந்த மாணவி பயன்படுத்திய கையடக்க தொலைபேசி இலக்கத்தை நீதிமன்ற அனுமதியுடன் பரிசோதனை செய்து அவர் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளார்.

அதன் பின்னர் மாணவியின் காதலன், அவரது தாய் மற்றும் சகோதரி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்படும் போது அந்த மாணவியும், காதலனும் கணவன், மனைவியாக வாழ்ந்து வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள், நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், காதலனும் அவரது தாயும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளர்.

சகோதரி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளான மாணவியை அநுராதபுரம் - சாலியபுர பிரதேசத்தில் அமைந்துள்ள சிறுவர் தடுப்பு மையத்தில் தடுத்து வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

No comments

Powered by Blogger.