உலக சுற்றுலா தினத்தையொட்டி மாணவர்களிடையே கட்டுரைப் போட்டி

செ.துஜியந்தன்
 
இலங்கை சுற்றுலா சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையினால் அன்பான இலங்கை நிகழ்ச்சி திட்டத்துடன் இணைந்த உலக சுற்றுலா தினத்திற்கு சமமாக கட்டுரைப்போட்டி ஒன்று மாணவர்களிடையே நடத்தப்படவுள்ளது.
ஐக்கிய நாடுகளின் உலக சுற்றுலா தினம் செப்டெம்பர் 27 ஆம் திகதி அனுஷ;டிக்கப்படுகின்றது. ' அபிவிருத்திக்காக நிலையான சுற்றுலா' எனும் தொனிப்பொருளின் கீழ் இவ் வருடம் சுற்றுலா தினம் அனுஷ;டிக்கப்படவுள்ளது.

அதனையொட்டி தரம் 09 மற்றும் தரம் 10 மாணவர்களிடையே நாடளாவிய ரீதியில் கட்டுரைப் போட்டிகள் நடத்தப்படவுள்ளது.

இப்போட்டிக்குரிய கட்டுரைகள் ' நிலையான சுற்றுலா அபிவிருத்தியை நோக்கி இலங்கையில் ஏற்படுத்தக் கூடிய தரமான சுற்றுலா தளங்கள்' என்ற தலைப்பில் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்படவேண்டும்.

இக்கட்டுரைப் போட்டிக்கு அமைய எழுதப்பட்ட ஆக்கங்களை செப்டெம்பர் முதலாம் திகதிக்கு முன் பாடசாலை அதிபர் மற்றும் வகுப்பாசிரியர்கள் சிபார்சுடன் பணிப்பாளர், தேசிய சுற்றுலா மற்றும் சமூக ஒருங்கிணைப்புப் பிரிவு, இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை, இல 80, காலிவீதி, கொழும்பு- 03 என்ற முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.