விவேகம் திரைப்படம் ஓடிய தியேட்டரில் ரசிகர் திடீர் மரணம்..!

விவேகம் திரைப்படம் ஓடிய தியேட்டரில் திடீரென்று ரசிகர் ஒருவர் உயிரிழந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் அஜித்குமார், விவேக் ஓபராய், காஜல் அகர்வால், அக்ஷரா ஹாசன் உள்ளிட்டோர் நடித்துள்ள விவேகம் படம் உலகம் முழுவதும் நேற்று வெளியானது.

இந்நிலையில், நாகப்பட்டினம் மாவட்டம் கிளியனூர் பகுதியை சேர்ந்த ரசிகர் சபுரூதீன்(31), காரைக்காலில் உள்ள தியேட்டரில் நண்பர்களுடன் படம் பார்க்க சென்றுள்ளார்.

படம் பார்த்துக்கொண்டிருந்த போது திடீரென்று மயங்கிய விழுந்த சபுரூதீனை, அவரது நண்பர்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

ஆனால், ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இது தொடர்பாக சபுரூதீனின் மனைவி ஆலம் முனிராபேகம் அளித்த புகாரின் பேரில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.