கழுத்து துண்டிக்கப்பட்ட நிலையில் பெண் ஒருவர் கொலை

ஊவபரணகம – கிரவனாபிஸ்ஸ – தபகஹபிடிய பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தினால் தாகப்பட்டு, கழுத்து துண்டிக்கப்பட்ட நிலையில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

நேற்று இரவு குறித்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

ஊவபரணகம பிரதேசத்தினை சேர்ந்த 33 வயதுடைய இளம் பெண்ணே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

கொலை செய்த நபர் உயிரிழந்த பெண்ணுடன் தகாத தொடர்பில் ஈடுபட்ட நபர் என அறியவந்துள்ளது.

குறித்த சந்தேக நபர் பிரதேசத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளார்.

இந்நிலையில் சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை ஊவபரணகம காவற்துறை முன்னெடுத்துள்ளது.

No comments

Powered by Blogger.