அமெரிக்க வாழ் இலங்கையர்களுக்கான செய்தி!

அமெரிக்காவில் வீசிய ஹார்வி சூறாவளியில் அமெரிக்காவில் வாழும் இலங்கையர்கள் எவரேனும் பாதிக்கப்பட்டிருப்பின் அங்குள்ள இலங்கைக்கான தூதரகத்தை தொடர்புகொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் மத்திய டெக்சாஸ் பிரந்தியத்தில் நேற்றைய தினம் 110 கிலோமீற்றருக்கும் அதிகமான வேகத்தில் காற்று வீசியுள்ளது.

இந்த நிலையில் குறித்த பகுதியில் வசிக்கும் இலங்கையர்களுக்கு ஏதேனும் பாதிப்புக்கள் ஏற்பட்டிருக்கும்பட்சத்தில் அங்கிருக்கும் இலங்கை தூதரகத்தை தொடர்பு கொண்டு உதவிகளை பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.