முருங்கன் கட்டுக்கரை குளம் பகுதியில் உள்ள கட்டுப்பகுதியில் இருந்து சிதைவடைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

மன்னார் முருங்கன் கட்டுக்கரை குளம் பகுதியில் உள்ள கட்டுப்பகுதியில் இருந்து சிதைவடைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலத்தை இன்று வியாழக்கிழமை(24) காலை முருங்கன் பொலிஸார் மீட்டுள்ளனர்.

சிதைவடைந்த நிலையில் சடலம் ஒன்று காணப்படுவதாக முருங்கன் பொலிஸாருக்கு பொது மக்கள் வழங்கி தகவலின் அடிப்படையிலே சம்பவ இடத்திற்கு சென்ற முருங்கன் பொலிஸார் குறித்த சடலத்தை மீட்டுள்ளனர்.

குறித்த சடலம் மிகவும் சிதைவடைந்த நிலையில் காணப்படுவதோடு,சடலத்திற்கு அருகில் கைப்பை,கையடக்கத்தொலைபேசி ஆகியவை காணப்பட்டுள்ளது.

சடம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சிதைவடைந்த நிலையில் மீட்கப்பட்டவர் யார் என்பது தொடர்பில் இது வரை எவ்வித தகவல்களும் தெரிய வரவில்லை.

மேலதிக விசாரனைகளை முருங்கன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்


No comments

Powered by Blogger.