தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் ஆளுநரிடம் மனு!

டி.டி.வி. தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 19 பேர் ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்து கடிதம் கொடுத்துள்ளனர். அதில், மெஜாரிட்டியை நிரூபிக்க முதல்வர் பழனிசாமி அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
டி.டி.வி. தினகரனுக்கு நேற்றுவரை 18 எம்.எல்.ஏ-க்கள் ஆதரவு அளித்திருந்த நிலையில் விளாத்திகுளம் எம்.எல்.ஏ உமாமகேஸ்வரி இன்று காலை தினகரனைச் சந்தித்து ஆதரவளித்தார். எடப்பாடி பழனிசாமி அணியும் ஓ.பன்னீர்செல்வம் அணியும் நேற்று இணைந்ததைத் தொடர்ந்து, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் இன்று காலை ஆலோசனை நடத்தினர். 

அதன் பின்னர் முத்தையா, செந்தில் பாலாஜி, பழனியப்பன், கோதண்டபாணி, ரங்கசாமி, கென்னடி மாரியப்பன், தங்க தமிழ்ச்செல்வன், அரூர் முருகன், தங்கதுரை, பாலசுப்ரமணியன், வெற்றிவேல், ஜக்கையன், ஜெயந்தி, ஏழுமலை, சுந்தர்ராஜ், கதிர்காமு, உமாமகேஸ்வரி ஆகியோர் ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்து கடிதம் கொடுத்துள்ளனர். அதில், மெஜாரிட்டியை நிரூபிக்க முதல்வர் பழனிசாமி அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

No comments

Powered by Blogger.