தமிழக மருத்துவக் கலந்தாய்வில் போலி சான்றிதழ் வழங்கிய கேரள மாணவர்கள்!

மருத்துவக் கலந்தாய்வில் 9 மாணவர்கள் போலி இருப்பிடச் சான்றிதழ் வழங்கியிருப்பதைத் தமிழக சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் உறுதி செய்துள்ளார். 

நீட் மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கும், சுயநிதி மருத்துவக் கல்லூரி மேனேஜ்மென்ட் ஒதுக்கீட்டு இடங்களுக்குமான தர வரிசைப்பட்டியலை ராதாகிருஷ்ணன் நேற்று முன்தினம் வெளியிட்டார். அதன் அடிப்படையில், நேற்று முதல் மருத்துவக் கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. முதல் நாளில் மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்கள், ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கான சிறப்புக் கலந்தாய்வு நடைபெற்றது. இன்று பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வுதொடங்கியுள்ளது.

தமிழகத்தில் நீட் தேர்வில் முதல் 10 இடங்களைப் பிடித்த மாணவர்களுக்குத் தமிழக சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் இன்று சேர்க்கை ஆணை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ராதாகிருஷ்ணன், ’மருத்துவக் கலந்தாய்வில் கேரளாவைச் சேர்ந்த 
9 மாணவர்கள் போலி இருப்பிடச் சான்றிதழ் வழங்கியிருப்பது உறுதியானது. அவர்கள் மீது முறைப்படி புகார் பதியப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும். போலி இருப்பிடச் சான்றிதழ் வழங்கும் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.