விஜய்யுடன் போட்டிபோட மேலும் மூன்று படங்களா? இன்னுமா

இந்த வருட தீபாவளி மெர்சல் மயமாகி வருகிறது. அட்லீ இயக்கத்தில் விஜய், காஜல் அகர்வால், சமந்தா, நித்யா என பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். சினிமாவிலும் கடும் போட்டி நிலவும் போது தீபாவளிக்கு மெர்சல் உறுதியான நிலையில், ஹர ஹர மஹா தேவகி, ஸ்கெட்ச் ஆகிய படங்கள் வருவதாக சொல்லியிருக்கிறார்கள்.
தற்போது மேலும் பிரபு தேவா, ஹன்சிகா நடிக்கும் குலேபகாவில் படமும் வரப்போகிறதாம். எம்.ஜி.ஆர் நடித்த குலேபகாவலியை நினைவு படுத்தும் விதமாக இருக்குமாம்.
மேலும் இதனுடன் கௌதம் கார்த்திக் நடித்து வரும் ஹர ஹர மஹா தேவகி தயாராகி வரும் நிலையில், சுசீந்திரன் இயக்கத்தில் கௌதம், விக்ராந்த், சந்தீப் கிஷன், மெஹரின் ஆகியோர் நடித்துள்ள நெஞ்சில் துணிவிருந்தால் படமும் வெளியாவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுனுடன் நடிகர் அர்ஜூன் தனது மகள் ஐஸ்வர்யா மற்றும் கன்னட நடிகர் சந்தன் குமாரை வைத்து இயக்கும் சொல்லி விடவா படமும் அதே நாளில் வெளியாகவுள்ளது.

No comments

Powered by Blogger.