சைட்டத்துக்கு(SAITM)எதிரான எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்.

அம்பாறை பொது வைத்தியசாலை மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் கைகளில் கறுப்பு பட்டி அணிந்து கொண்டும் பதாதைகள்,கறுப்பு கொடிகளை ஏந்திக்கொண்டு,இலவச கல்வியையும் இலவச சுகாதாரத்தையும் பாதுகாப்போம்,போலியான தீர்வுகள் வேண்டாம் சைட்டத்தை மூடு,நோயாளர்களின் உயிர் இடர் நிலையில்,சைட்டத்தை தடை செய் என்ற கோசங்களை எழுப்பியவாறு சைட்டத்துக்கு எதிராக தமது எதிர்ப்பை வைத்தியசாலை முன்பாக இன்று(02) வெளிப்படுத்தினர்.
அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்,அரச மருத்துவ மாணவர்கள் சங்கம்,மக்கள் விடுதலை முன்னணி மற்றும் தபால் சங்கம் ஆகியோர் இவ் எதிர்ப்பினை வெளிப்படுத்தினர்.-துறையூர் தாஸன்

No comments

Powered by Blogger.