அதியுயர் சேமிப்பு வசதி கொண்ட ஹார்ட் டிஸ்கை அறிமுகம் செய்யும் Toshiba

கணினி வடிவமைப்பு மற்றும் அதற்கான சிறந்த துணைச் சாதனங்களை உருவாக்குவதில் Toshiba நிறுவனம் முன்னணியில் திகழ்கின்றது.

இந் நிறுவனம் தற்போது கணினி துணைச் சாதன வடிவமைப்பில் மற்றுமொரு புரட்சியை மேற்கொண்டுள்ளது.

அதாவது 3.5 அங்குல அளவுடையதும், 8TB சேமிப்பு கொள்ளளவுடையதுமான ஹார்ட் டிஸ்கை இம் மாதம் அறிமுகம் செய்யவுள்ளது.

இச் சேமிப்பு சாதனமானது X300 தொடரில் அறிமுகம் செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே இதே தொடரில் 4 TB, 5 TB, 6 TB ஹார்ட் டிஸ்கள் விற்பனையில் உள்ளன.

தற்போது அறிமுகம் செய்யப்படவுள்ள 8TB ஹார்ட் டிஸ்க் ஆனது SATA வகையை சார்ந்ததுடன், 7,200 RPM மற்றும் 6 Gbit/s வேகத்தில் தரவுகளைக் கடத்தக்கூடியதாகவும் இருக்கின்றது.

எனினும் இதன் விலை தொடர்பான தகவல்கள் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

No comments

Powered by Blogger.