மைக்ரோசாப்டின் Virtual Reality தொழில்நுட்பம் அறிமுகம்

கண் அசைவிற்கு மட்டுமே கட்டுப்படும் Virtual Reality தொழில்நுட்பத்தை மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
முதற்கட்டமாக Keyboard மற்றும் Mouse ஆகியவற்றை இயக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

விண்டோஸ் 10 இயங்குதளத்தில் பரிசோதனை முயற்சியாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த தொழில்நுட்பம் Tobii EYE Tracker 4C என்னும் விளையாட்டை முன்மாதிரியாக கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை மென்பொறியாளர் டோனா சர்கார் கூறுகையில், முதலில் விண்டோஸ் இயங்குதளத்தில் இந்த மென்பொருளை பதிவிறக்கம் செய்த பின்னர் Eye Control என்னும் வசதியை ஆக்டிவேட் செய்ய வேண்டும்.

இதன்மூலம் Keyboard மற்றும் Mouse ஆகியவற்றிடம் பார்த்து பேச முடியும், நாம் பார்க்கும் விதத்தை பொறுத்து இயங்கும் திறன் படைத்தது.

இருப்பினும் சூரிய ஒளி அதிகம் உள்ள இடங்களில் இயக்குவதில் சிக்கல் இருப்பதால் சரிசெய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.