12 ராசிகளுக்கான குருப் பெயர்ச்சி பலன்கள்!!2017-க்கான குருப் பெயர்ச்சி பலன்களை ஜோதிடரத்னா சோ. சந்திரசேகரன் அவர்கள் துல்லியமாக நமக்கு கணித்து அளித்துள்ளார்.

நவகிரகங்களின் மிகவும் நற்பலன்களைக் கொடுப்பவர் குரு பகவான். இவர் வருடத்துக்கு ஒருமுறை ஒரு ராசியைக் கடந்து அடுத்த ராசிக்குச் செல்கின்றார். தற்போது, வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி 2017, செப்டம்பர் 2-ம் தேதி அன்று கன்னி ராசியிலிருந்து துலாம் ராசிக்குச் செல்கின்றார். திருக்கணிதப் பஞ்சாங்கத்தின்படி, செப்டம்பர் 12-ம் தேதி அன்று கன்னி ராசியிலிருந்து துலாம் ராசிக்கு குரு செல்கின்றார்.

பொதுவாக, குரு பார்த்தால் கோடி நன்மை உண்டாகும் என்பது நமது நம்பிக்கை. ஒருவருக்கு லக்கினத்துக்கோ, அல்லது லக்கினாதிபதிக்கோ, அல்லது சந்திரனுக்கோ குருபார்வை இருந்தால் அவர்களுக்கு தெய்வ அனுகூலம் கிடைக்கும். அவர்கள் செய்யும் பிரார்த்தனைகளுக்கோ அல்லது பரிகாரங்களுக்கோ பலன் கிடைக்கும்.


மேஷம் 
சாதுர்யமாகப் பேசி சாதிப்பவர்களே!

உங்கள் ராசிக்கு 7-ல் 2.9.17 முதல் 2.10.18 வரை குருபகவான் அமர்ந்து பலன்களைத் தர இருக்கிறார். உங்களுடைய திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும். அறிவாற்றலை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் அமையும். உடல் நலம் சீராகும். தடைப்பட்ட காரியங்களையெல்லாம் விரைந்து முடிப்பீர்கள். வி.ஐ.பி.-க்களின் அறிமுகம் கிடைக்கும். கொடுத்த கடன் திரும்ப வரும். பணவரவும் அதிகரிக்கும். பிரிந்திருந்த கணவன் - மனைவி ஒன்று சேருவீர்கள். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். குலதெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். வழக்குகளில் சாதகமான தீர்ப்பு வரும்.

குருபகவானின் பார்வை:

குருபகவான் தனது 5-ம் பார்வையால் லாப வீட்டைப் பார்ப்பதால் புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். விலை உயர்ந்த ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். ஷேர் மூலமாகப் பணம் வரும். மூத்த சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள்.


7-ம் பார்வையால் உங்கள் ராசியைப் பார்ப்பதால் எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். மகளின் திருமணம் சிறப்பாக நடைபெறும். வாழ்க்கைத்துணை உங்கள் முயற்சிகளுக்கு ஆதரவாக இருப்பார். சுபநிகழ்ச்சிகளால் வீடு களை கட்டும்.


9-ம் பார்வையால் 3-ம் இடத்தைப் பார்ப்பதால் ஆளுமைத் திறன் அதிகரிக்கும். தன்னம்பிக்கை கூடும். கடன் பிரச்னைகள் கட்டுக்குள் வரும். இளைய சகோதர வகையில் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.
குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:


உங்கள் ராசியாதிபதியும், அஷ்டமாதிபதியுமான செவ்வாயின் சித்திரை நட்சத்திரம் 3,4-ம் பாதம் துலாம் ராசியில் 2.9.17 முதல் 5.10.17 வரை குருபகவான் செல்வதால் திடீர் யோகம் உண்டாகும். போட்டிகளில் வெற்றி கிடைக்கும். உடன்பிறந்தவர்களின் ஆதரவு பெருகும். வீடு, மனை வாங்குவது விற்பது லாபகரமாக முடியும். ஆனால், எதிர்பாராத செலவுகளும் பயணங்களும் இருந்துகொண்டே இருக்கும்.


6.10.17 முதல் 7.12.17 வரை ராகுபகவானின் சுவாதி நட்சத்திரத்தில் செல்வதால், மனதில் இனம் தெரியாத கவலை ஏற்படும். கணவன் - மனைவிக்குள் அனுசரித்துச் செல்வது நல்லது. பணப் பற்றாக்குறை ஏற்படும். பிற மொழி பேசுபவர்களால் ஆதாயம் உண்டாகும்.


உங்கள் ராசிக்கு 9 மற்றும் 12-ம் இடங்களுக்கு உரிய குருபகவான், தன் சுய நட்சத்திரமான விசாகம் 1,2,3-ம் பாதம் துலாம் ராசியிலேயே 8.12.17 முதல் 4.7.18 வரை சஞ்சரிப்பதால் எதிலும் வெற்றி உண்டாகும். மகனுக்கு எதிர்பார்த்த நிறுவனத்தில் வேலை கிடைக்கும். ஆனாலும், அவ்வப்போது தூக்கம் குறையும். பாதியில் நின்ற வீடுகட்டும் பணியை முடித்து கிரகபிரவேசம் செய்வீர்கள்.


குருபகவானின் அதிசார வக்கிர சஞ்சாரம்:


14.2.18 முதல் 10.4.18 வரை விசாகம் நட்சத்திரம் 4-ம் பாதத்தில் அதிசார வக்கிரத்தில் ராசிக்கு 8-ம் இடத்தில் செல்வதால் வரவுக்கு மிஞ்சிய செலவுகள் ஏற்படும். வேலைச் சுமையால் மனதில் சோர்வு ஏற்படும். தந்தையின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். மனதில் அவ்வப்போது இறுக்கம் உண்டாகும்.


குருபகவானின் வக்கிர சஞ்சாரம்:


7.3.18 முதல் 3.7.18 வரை தன் சுய சாரமான விசாகம் நட்சத்திரம் துலாம் ராசியில் குருபகவான் வக்கிர கதியில் செல்வதால் வீண் பிரச்னை, வழக்கால் நிம்மதியின்மை வந்து செல்லும்.


வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளைச் சரி செய்வீர்கள். வாடிக்கையாளர்களின் ரசனைக்கும் சந்தை நிலவரத்துக்கும் ஏற்ப முதலீடு செய்வீர்கள். பழைய பாக்கிகள் வசூலாகும். அனுபவம் மிக்க வேலையாட்களை பணியில் அமர்த்துவீர்கள். மருந்து, பெட்ரோகெமிக்கல், ஸ்பெக்குலேஷன், கட்டட உதிரி பாகங்கள், போர்டிங் - லாட்ஜிங், எலெக்ட்ரானிக்ஸ் வகைகளால் ஆதாயம் உண்டாகும்.


உத்தியோகத்தில் வேலைச்சுமை குறையும். தடைப்பட்டிருந்த பணிகளை விரைந்து முடிப்பீர்கள். மூத்த அதிகாரி ஆதரவாக இருப்பார். சக ஊழியர்களும் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். ஆளுமைத் திறனும் நிர்வாகத் திறனும் பாராட்டப்படும்.


மாணவ மாணவியர் படிப்பில் முன்னேற்றம் காண்பீர்கள். நினைவாற்றல் கூடும். தேர்வுகளில் எதிர்பார்த்த மதிப்பெண்கள் பெறுவீர்கள். விரும்பிய கல்விப் பிரிவில் சேருவீர்கள். உங்களுடைய தனித் திறமையை வளர்த்துக்கொள்ளும் முயற்சிகளில் ஈடுபடுவீர்கள்.


கலைத்துறையினரே! உங்கள் படைப்புகளால் புகழ் அடைவீர்கள். விருதுக்கு உங்கள் பெயர் பரிசீலிக்கப்படும். வரவேண்டிய சம்பள பாக்கி வந்து சேரும்.


இந்த குருப்பெயர்ச்சி பட்டுப்போன உங்கள் வாழ்க்கையைப் பசுமையாக மாற்றி, எங்கும் புகழைப் பெற்றுத் தரும்.


பரிகாரம்: திருவாதிரை நட்சத்திரத்தன்று மயிலாடுதுறைக்குச் சென்று, ஸ்ரீவதாரண்யேஸ்வரர் கோயிலில் அருளும் ஸ்ரீமேதா தட்சிணாமூர்த்தியை வணங்கி வாருங்கள்; தேவைகள் பூர்த்தியாகும். 

ரிஷபம்
முயற்சியைக் கை விடாதவர்களே!


2.9.17 முதல் 2.10.18 வரை குருபகவான் உங்கள் ராசிக்கு 6-ம் வீட்டில் பிரவேசிக்க இருக்கிறார். சகட குரு கலக்கத்தைத் தருவாரே என்று அச்சப்படவேண்டாம். சின்னச் சின்ன போராட்டங்களைச் சந்திக்கவேண்டி இருந்தாலும், அதனால் பெரிதும் பாதிப்பு ஏற்படாது. பணம் வந்தாலும் செலவுகளும் துரத்தும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கணவன் - மனைவிக்குள் பிரச்னைகள் ஏற்படக்கூடும். ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்லவும். கடன்கள் கவலை தரும். புதியவர்களை நம்பி முடிவு எடுக்கவேண்டாம்.
குருபகவானின் பார்வை:


குருபகவான் தனது 5-ம் பார்வையால் 10-ம் வீட்டைப் பார்ப்பதால், தடைப்பட்ட வேலைகள் முடியும். வெளிநாட்டில் இருக்கும் நண்பர்களால் அனுகூலம் உண்டாகும். வி.ஐ.பி.-க்களின் அறிமுகம் கிடைக்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும்.


குருபகவான் தன்னுடைய 7-ம் பார்வையால் 12-ம் வீட்டைப் பார்ப்பதால் சுபச் செலவுகள் அதிகரிக்கும். சிலருக்கு அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். காணாமல் போன முக்கியமான ஆவணம் திரும்பக்கிடைக்கும்.


குருபகவான் தன்னுடைய 9-ம் பார்வையால் 2-ம் வீட்டைப் பார்ப்பதால் எதிர்பார்த்த வகையில் பணம் வரும். உடல் ஆரோக்கியம் மேம்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன் - மனைவிக்கு இடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும்.
குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:


2.9.17 முதல் 5.10.17 வரை உங்கள் ராசிக்கு 7 மற்றும் 12 ஆகிய வீடுகளுக்கு உரிய செவ்வாயின் நட்சத்திரமான சித்திரை 3,4-ம் பாதம் துலாம் ராசியில் செல்வதால், கணவன் - மனைவிக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும். நீண்ட காலமாகச் செல்ல நினைத்த புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். திருமண முயற்சிகள் சாதகமாகும்.


6.10.17 முதல் 7.12.17 வரை ராகுபகவானின் சுவாதி நட்சத்திரத்தில் செல்வதால், பிரச்னைகளைப் போராடி சமாளிக்கும் ஆற்றல் கிடைக்கும். ஷேர் மூலம் பணம் வரும். பாதியில் நின்ற வீடு கட்டும் பணியை மீண்டும் தொடங்குவீர்கள்.


உங்கள் ராசிக்கு 8 மற்றும் 11-ம் இடங்களுக்கு அதிபதியான குரு பகவானின் சுய நட்சத்திரமான விசாகம் 1,2,3-ம் பாதம் துலாம் ராசியிலேயே 8.12.17 முதல் 13.2.18 வரை மற்றும் 4.7.18 முதல் 2.10.18 வரை செல்வதால், பரபரப்பாகச் செயல்படுவீர்கள். செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். பணம் மற்றும் கடன்கள் விவகாரத்தில் கவனமாக இருக்கவும்.


குருபகவானின் அதிசார வக்கிர சஞ்சாரம்:


14.2.18 முதல் 10.4.18 வரை விசாகம் நட்சத்திரம் 4-ம் பாதத்தில் அதிசார வக்கிரத்தில் உங்கள் ராசிக்கு 7-ம் வீட்டில் குருபகவான் அமர்ந்து உங்களுடைய ராசியைப் பார்ப்பதால் திறமைகள் வெளிப்படும். பணவரவு அதிகரிக்கும். பிரிந்திருந்த கணவன்-மனைவி ஒன்று சேருவீர்கள். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். விலை உயர்ந்த மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். திருமணம் தள்ளிப் போனவர்களுக்குக் கூடி வரும்.


குருபகவானின் வக்கிர சஞ்சாரம்:


7.3.18 முதல் 3.7.18 வரை தன் சுய நட்சத்திரமான விசாகம் நட்சத்திரம் துலாம் ராசியில் குருபகவான் வக்கிர கதியில் செல்வதால், மனதில் இனம் தெரியாத கவலைகள் வந்து நீங்கும். வீண் விரயங்கள், ஏமாற்றங்கள் வந்து செல்லும்.


வியாபாரம் ஒரு வாரம் இருப்பதுபோல் மறு வாரம் இருக்காது. வியாபாரத்தை அபிவிருத்தி செய்ய எதிர்பார்க்கும் கடன் உதவியும் தள்ளிப் போகும். போட்டியாளர்களால் லாபம் குறையும். வேலையாட்கள் அடிக்கடி விடுப்பில் செல்வார்கள். எந்த ஒரு மாற்றமும் செய்யவேண்டாம். இருப்பதை தக்கவைத்துக் கொள்ளவும். பங்குதாரர்கள் சிலர் தங்கள் பங்கைக் கேட்டு தொந்தரவு தருவார்கள்.


உத்தியோகத்தில் எவ்வளவுதான் உழைத்தாலும் உரிய அங்கீகாரம் கிடைக்காது. மற்றவர்கள் உங்கள் திறமைகள் மறக்கடிக்கப்படும். சக ஊழியர்களுடன் ஈகோ பிரச்னை வந்து செல்லும். உங்கள் மீது தேவையற்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்படும். பணியில் திடீர் இடமாற்றம் உண்டாகும். பதவி உயர்வு மற்றும் சலுகைகளைப் போராடித்தான் பெறவேண்டி இருக்கும்.


மாணவ மாணவியர் சமயோசிதமாக நடந்துகொள்ளவேண்டும். படிப்பில் கவனமாக இருப்பது மிகவும் அவசியம். விளையாட்டுப் போட்டிகளில் அடிபடக்கூடும் என்பதால் எச்சரிக்கையாக இருக்கவும்.


கலைத்துறையினர்களே! விமர்சனங்களால் சோர்வு அடையவேண்டாம். வாய்ப்புகளை அலைந்து திரிந்துதான் பெறவேண்டி இருக்கும். மூத்த கலைஞர்கள் உதவி செய்வார்கள்.


இந்த குருமாற்றம் அவ்வப்போது சுகவீனங்களையும் தோல்விகளையும் தந்தாலும், ஆராய்ந்து செயல்படவேண்டிய அவசியத்தை வலியுறுத்துவதாக அமையும்.


பரிகாரம்: அமாவாசை தினத்தன்று தென்குடித்திட்டை திருத்தலத்துக்குச் சென்று, பசுபதிநாதரையும் தட்சிணாமூர்த்தி பகவானையும் வணங்கி வாருங்கள்; முயற்சிகள் பலிதமாகும்.

மிதுனம் 
மற்றவர்களை மகிழ்வித்து மகிழ்பவர்களே!


உங்கள் ராசிக்கு பூர்வபுண்ணியஸ்தானமாகிய 5-ம் வீட்டில் 2.9.17 முதல் 2.10.18 வரை குருபகவான் அமர இருக்கிறார். எனவே, அடிப்படை வசதிகள் பெருகும். பழைய பிரச்னைகளுக்குத் தீர்வு கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். பிள்ளைகள் தங்கள் பொறுப்பை உணர்ந்து நடந்துகொள்வார்கள். கணவன் - மனைவிக்கு இடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். வெளிநாடு தொடர்புடைய நிறுவனத்தில் வேலை கிடைக்கும். தாயாரின் உடல் நலம் சீராகும். வழக்குகளில் சாதகமான தீர்ப்பு வரும். விலகிச் சென்ற உறவினர்களும் நண்பர்களும் மீண்டும் வந்து பேசுவார்கள். குடும்பத்தினருடன் சென்று குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள்.
குருபகவானின் பார்வை:


குருபகவான் 5-ம் பார்வையால் 9-ம் வீட்டைப் பார்ப்பதால், வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். தொழிலதிபர்களின் நட்பு கிடைக்கும். நல்ல வேலை அமையும். பூர்வீகச் சொத்து கைக்கு வரும். தந்தை மற்றும் தந்தை வழி உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். சிலருக்கு வெளிநாட்டுப் பயணம் அமையும்.


குருபகவான் தன்னுடைய 7-ம் பார்வையால் உங்கள் லாப வீடான 11-ம் வீட்டைப் பார்ப்பதால், புகழ், கௌரவம் உயரும். கடினமான காரியங்களையும் எளிதாக முடித்துக் காட்டுவீர்கள். சுபநிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். சொந்த வீடு வாங்கி கிரகபிரவேசம் செய்வீர்கள். ஷேர் மூலம் லாபம் வரும்.


குருபகவான் தன் 9-ம் பார்வையால் ராசியைப் பார்ப்பதால், எவரையும் வசீகரிப்பீர்கள். உடல்நலம் சீராகும். உறவினர், நண்பர் வீட்டு சுப நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள். உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். விலை உயர்ந்த ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள்.
குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:


உங்கள் ராசிக்கு 6 மற்றும் 11-ம் வீட்டுக்கு உரிய செவ்வாயின் சித்திரை நட்சத்திரம் 3,4-ம் பாதம் துலாம் ராசியில் 2.9.17 முதல் 5.10.17 வரை குருபகவான் செல்வதால், எதிர்ப்புகளும் விமர்சனங்களும் இருந்தாலும் அஞ்சவேண்டாம். முன்கோபத்தைத் தவிர்ப்பது நல்லது. யோகா, தியானம் போன்றவற்றில் ஈடுபாடு அதிகரிக்கும். சகோதரர்களுடன் மனஸ்தாபம் ஏற்படும்.


6.10.17 முதல் 7.12.17 வரை ராகு பகவானின் சுவாதி நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால், வீண் டென்ஷன், உடல் அசதி, சோர்வு வந்து செல்லும். பூர்வீகச் சொத்தில் பிரச்னை ஏற்படக்கூடும். உறவினர்களுடன் அளவோடு பழகவும்.


உங்களின் ராசிக்கு 7 மற்றும் 10-ம் வீடுகளுக்கு உரிய குருபகவான் தன் சுய நட்சத்திரமான விசாகம் நட்சத்திரம் 1,2,3-ம் பாதம் துலாம் ராசியிலேயே 8.12.17 முதல் 13.2.18 வரை மற்றும் 4.7.18 முதல் 2.10.18 வரை செல்வதால், எதையும் திட்டமிட்டுச் செய்வீர்கள். வாழ்க்கைத்துணை உங்களுடைய முயற்சிகளுக்கு பக்கபலமாக இருப்பார். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும்.


குருபகவானின் அதிசார வக்கிர சஞ்சாரம்:


14.2.18 முதல் 10.4.18 வரை விசாகம் நட்சத்திரம் 4-ம் பாதத்தில் அதிசார வக்கிரமாக குரு சென்று மறைவதால், உடல் ஆரோக்கியம் பற்றிய வீண் கவலை வந்து செல்லும். கணவன் - மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் தோன்றக்கூடும். அரசாங்கக் காரியங்கள் தடைப்பட்டு முடியும். சின்னச் சின்ன கௌரவப் பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும்.


குருபகவானின் வக்கிர சஞ்சாரம்:


7.3.18 முதல் 3.7.18 வரை தன் சுய சாரமான விசாகம் நட்சத்திரம் துலாம் ராசியில் குருபகவான் வக்கிர கதியில் செல்வதால், புதிய முயற்சிகள் வெற்றி அடையும். பணவரவு இருந்தாலும் செலவுகளும் துரத்தும். புதியவர்களின் நட்பால் உற்சாகம் அடைவீர்கள். அவர்களால் ஆதாயமும் உண்டாகும். கோயில் விழாக்களில் கலந்துகொள்வீர்கள்.வாழ்க்கைத்துணை வழி உறவினர்களின் மத்தியில் செல்வாக்குக் கூடும்.


வியாபாரத்தில் நஷ்டங்களைச் சரிசெய்வீர்கள். கடையை விரிவுபடுத்துவீர்கள். விளம்பர யுக்திகளைக் கையாண்டு தேங்கிக் கிடந்த சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள். வேலையாட்களும் பொறுப்பாக நடந்துகொள்வார்கள்.நீண்ட காலமாக வசூலாகாமல் இருந்த பழைய பாக்கிகள் வசூலாகும். பங்குதாரர்கள் உங்களுடைய ஆலோசனைகளை ஏற்றுக்கொள்வார்கள்.


உத்தியோகத்தில் உங்கள் செல்வாக்கு கூடும். உயரதிகாரிகள் உங்களை நம்பி சில முக்கியப் பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். சக ஊழியர்களுடன் இருந்து வந்த மோதல் போக்கு விலகும். சில புதிய வாய்ப்புகள் வரும். பதவி உயர்வு உண்டு. சம்பள பாக்கி கைக்கு வரும். மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும்.


மாணவ -மாணவிகளே! கடினமான பாடங்களிலும் அதிக மதிப்பெண்கள் பெறுவீர்கள். விளையாட்டு, கலை, இலக்கியப் போட்டிகளில் பரிசும் பாராட்டும் பெறுவீர்கள்.


கலைத்துறையினரே! வதந்திகளிலிருந்து விடுபடுவீர்கள். உங்களுடைய படைப்புகளுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும். மக்கள் மத்தியில் பிரபலமாவீர்கள்.


இந்த குருப்பெயர்ச்சி விரக்தியின் விளம்பிலிருந்த உங்களுக்கு புதிய சகாப்தத்தை தொடங்கி வைத்து சாதனையாளராக மாற்றும்.


பரிகாரம்: பரிகாரம்: பூரம் நட்சத்திரத்தில், மதுரை மாவட்டம் திடியன் மலை எனும் ஊரில் அருளும் ஸ்ரீகயிலாசநாதரையும், ஸ்ரீதட்சிணா மூர்த்தியையும் வணங்கி வாருங்கள்; நினைத்தது நிறைவேறும்.

கடகம்
உலக நடப்புகளை உன்னிப்பாக கவனிப்பவர்களே!


உங்கள் ராசிக்கு 4-ம் இடத்தில் 2.9.17 முதல் 2.10.18 வரை குருபகவான் அமர்ந்து பலன் தர இருக்கிறார். எதிலும் பொறுமை காப்பது நல்லது. நல்லவர்களின் தொடர்பை வளர்த்துக்கொள்ளுங்கள். வீட்டுப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். குடும்பத்தினருடன் அனுசரித்துச் செல்வது நல்லது. கணவன் - மனைவிக்கு இடையில் சிலர் பிரச்னை ஏற்படுத்தப் பார்ப்பார்கள் என்பதால் கவனமாக இருக்கவும். ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. தாயாரின் உடல் ஆரோக்கியம் சிறிய அளவில் பாதிக்கப்படக்கூடும். சிலருக்கு வீடு மாறவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும்.
குருபகவானின் பார்வை:


குருபகவான் தனது 5-ம் பார்வையால் உங்கள் ராசிக்கு 8-ம் வீட்டை பார்ப்பதால், பண வரவு இருந்தாலும் செலவுகளும் அதிகரிக்கும். உறவினர், நண்பர் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். பயணங்களால் ஆதாயம் உண்டாகும்.


குருபகவான் தன் 7-ம் பார்வையால் உங்கள் ராசிக்கு 10-ம் வீட்டைப் பார்ப்பதால், அதிக சம்பளத்துடன் புதிய வேலை கிடைக்கும். சிலர் வேலையில் இருந்துகொண்டே பகுதி நேரமாகத் தொழில் தொடங்கவும் வாய்ப்பு அமையும். அடகில் இருந்த நகை, பத்திரங்களை மீட்பீர்கள். ஷேர் மூலம் பணம் வரும்.


குருபகவான் தனது 9-ம் பார்வையால் உங்கள் ராசிக்கு 12-ம் வீட்டைப் பார்ப்பதால், சுபச் செலவுகள் அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் மதிப்பு கூடும். நீண்டகாலமாகச் செல்ல நினைத்த புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள்.
குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:


உங்களின் பிரபல யோகாதிபதியான செவ்வாயின் சித்திரை நட்சத்திரம் 3,4-ம் பாதம் துலாம் ராசியில் 2.9.17 முதல் 5.10.17 வரை குருபகவான் செல்வதால், பணப்புழக்கம் அதிகரிக்கும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். உத்தியோகம் தொடர்பான முயற்சிகள் சாதகமாக முடியும்.


6.10.17 முதல் 7.12.17 வரை ராகு பகவானின் சுவாதி நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால், பாதியில் நின்ற கட்டட வேலையை மறுபடியும் தொடங்குவீர்கள். அரசாங்க விஷயம் சாதகமாக முடியும். தாயாருக்கு சிறிய அளவில் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படக்கூடும். மற்றவர்களுக்கு ஜாமீன் கொடுக்கவேண்டாம்.


உங்களின் ராசிக்கு 6 மற்றும் 9-ம் இடங்களுக்கு உரிய குருபகவான் தன் சுய நட்சத்திரமான விசாகம் 1,2,3-ம் பாதம் துலாம் ராசியிலேயே 8.12.17 முதல் 13.2.18 வரை மற்றும் 4.7.18 முதல் 2.10.18 வரை பயணிப்பதால் புகழ், கௌரவம் உயரும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களை கட்டும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். தந்தையின் உடல் ஆரோக்கியம் மேம்படும். வழக்கில் நெருக்கடிகள் நீங்கும்.


குருபகவானின் அதிசார வக்கிர சஞ்சாரம்:


14.2.18 முதல் 10.4.18 வரை விசாகம் நட்சத்திரம் 4-ம் பாதத்தில் அதிசார வக்கிரத்தில் உங்கள் ராசிக்கு 5-ம் வீட்டில் குருபகவான் சென்று அமர்வதால், பழைய பிரச்னைகளுக்குத் தீர்வு கிடைக்கும். பிள்ளைகளால் மதிப்பு மரியாதை கூடும். வருமானம் உயரும். கடன்கள் அடைபடும். நண்பர்களின் வட்டம் விரிவடையும். பூர்வீகச் சொத்து பிரச்னை முடிவுக்கு வரும். குடும்பத்தினருடன் சென்று குலதெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள்.


குருபகவானின் வக்கிர சஞ்சாரம்:


7.3.18 முதல் 3.7.18 வரை தன்னுடைய நட்சத்திரமான விசாகம் நட்சத்திரம் துலாம் ராசியில் பயணிப்பதால், மறைமுக எதிர்ப்புகள் அதிகரிக்கும். உங்கள் மீது வீண்பழி சுமத்தப்படும். புதிதாக அறிமுகம் ஆகும் நபர்களை நம்பி ஏமாறவேண்டாம். எதிலும் மாற்று வழியை யோசிப்பது நெருக்கடிகள் ஏற்படாமல் இருக்க உதவும்.


வியாபாரத்தில் போட்டிகளைச் சமாளிக்க கடினமாக உழைக்க வேண்டி வரும். என்னதான் அதிக சம்பளம் கொடுத்தாலும் வேலையாட்களிடம் இருந்து போதுமான ஒத்துழைப்பு கிடைக்காது. புது ஒப்பந்தங்கள் தள்ளிப் போகும். வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பெற போராடவேண்டி இருக்கும். கெமிக்கல், கமிஷன், வாகன உதிரி பாகங்கள், லாட்ஜிங் வகைகளால் லாபம் உண்டாகும்.


உத்தியோகத்தில் ஒரே நேரத்தில் பல வேலைகளையும் சேர்த்துப் பார்க்கவேண்டி இருக்கும். அதிகாரிகளில் ஒரு தரப்பினர் உங்களுக்கு ஆதரவாக இருந்தாலும், மற்றொரு தரப்பினர் குறை கூறிக்கொண்டே இருப்பார். தகுதி இல்லாதவர்களுக்குக் கிடைக்கும் முக்கியத்துவம் குறித்து ஆதங்கப்படுவீர்கள். சிலருக்கு விரும்பத்தகாத இடமாற்றம் உண்டாகும். சலுகைகள் தாமதமாகும்.


மாணவ - மாணவிகளே! படிப்பில் தீவிர கவனம் செலுத்தினால் மட்டுமே தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெற முடியும். தகுதி பார்த்து நட்பு கொள்ளவும். கலைத்துறையினரே! சின்ன பட்ஜெட் படங்களாக இருந்தாலும் ஏற்றுக் கொள்ளப் பாருங்கள். உங்களுடைய படைப்புகளுக்கு வேறு சிலர் உரிமை கொண்டாடுவார்கள்.


இந்த குரு மாற்றம் உங்களுக்கு பிரச்னைகளையும், இடப்பெயர்ச்சியையும் தந்தாலும் ஓரளவு முன்னேற வைக்கும்.


பரிகாரம்: அஸ்தம் நட்சத்திர நாளில், சென்னை திருவலிதாயம் (பாடி) தலத்துக்குச் சென்று, அங்கே அருள்பாலிக்கும் குருபகவானை வழிபட்டு வாருங்கள். நல்லது நடக்கும்.

சிம்மம்
தன்னம்பிக்கையும் இரக்கமும் கொண்டவர்களே


குருபகவான் உங்கள் ராசிக்கு 3-ம் இடத்தில் 2.9.17 முதல் 2.10.18 வரை அமர்ந்துகொண்டு பலன் தர இருக்கிறார். இக்காலக் கட்டத்தில் சகிப்புத் தன்மை மிகவும் அவசியம்.பணம் எவ்வளவு வந்தாலும் செலவுகளும் ஏற்படுவதால் பணப் பற்றாக்குறை நீடிக்கவே செய்யும். முக்கியமான விஷயங்களில் குடும்பத்தினருடன் ஆலோசித்து முடிவெடுப்பது நல்லது. குடும்ப விஷயத்தில் மற்றவர்களின் தலையீட்டை அனுமதிக்கவேண்டாம். முக்கிய அலுவல்களை நீங்களே செய்வதுதான் நல்லது.


குருபகவானின் பார்வை:


குரு தனது 5-ம் பார்வையால் உங்கள் ராசிக்கு 7-ம் இடத்தைப் பார்ப்பதால், திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும். ஆடை, ஆபரணங்கள் சேரும். பிரமுகர்களின் அறிமுகம் கிடைக்கும். கணவன் - மனைவிக்குள் இருந்து வந்த மனக் கசப்பு நீங்கும். வாழ்க்கைத்துணை வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். புது வேலை அமையும். தடைப்பட்ட திருமணம் கூடி வரும்.


குருபகவான் தன் 7-ம் பார்வையால் 9-ம் வீட்டைப் பார்ப்பதால், சிந்தித்து சாதிப்பீர்கள். தந்தையாரின் ஆரோக்கியம் சீராகும். பிதுர்வழி சொத்தைப் பெறுவதில் இருந்த தடைகள் நீங்கும். செலவுகளைக் குறைக்க திட்டமிடுவீர்கள். சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு உண்டாகும். பழைய கடன்களைத் தீர்க்க புது வழி ஒன்றை யோசிப்பீர்கள்.


குருபகவான் தனது 9-ம் பார்வையால் உங்களின் லாப வீட்டைப் பார்ப்பதால், நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். வீட்டில் தள்ளிப் போன சுப நிகழ்ச்சிகள் அடுத்தடுத்து நடந்தேறும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும்.
குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:


உங்கள் ராசிக்கு 4 மற்றும் 9-ம் இடங்களுக்கு உரிய செவ்வாயின் சித்திரை நட்சத்திரம் 3, 4-ம் பாதம் துலாம் ராசியில் 2.9.17 முதல் 5.10.17 வரை குருபகவான் செல்வதால், காரியத்தில் கண்ணாக இருப்பீர்கள். வீட்டில் கூடுதலாக அறை அல்லது தளம் அமைக்க வங்கிக் கடனுதவி கிடைக்கும். தாயாரின் உடல் ஆரோக்கியம் சீர்படும்.


06.10.17 முதல் 7.12.17 வரை ராகு பகவானின் சுவாதி நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால், முக்கிய முடிவுகளை தைரியமாக எடுப்பீர்கள். பிற மொழி பேசுபவர்களால் அனுகூலம் உண்டாகும். விருந்தினர்கள் வருகையால் வீடு களைகட்டும்.


உங்கள் ராசிக்கு 5 மற்றும் 8-ம் வீடுகளுக்கு உரிய குருபகவானின் சுய நட்சத்திரமான விசாகம் 1,2,3-ம் பாதம் துலாம் ராசியிலேயே 8.12.17 முதல் 13.2.18 வரை மற்றும் 4.7.18 முதல் 2.10.18 வரை செல்வதால், பணவரவு உண்டு. சொத்து வாங்குவது, விற்பது லாபகரமாக முடியும். பிள்ளைகளால் அலைச்சலும் செலவுகளும் ஏற்படும். பூர்வீக சொத்துப் பிரச்னைக்கு சுமுகத் தீர்வு காண்பது நல்லது.
குருபகவானின் அதிசார வக்கிர சஞ்சாரம்:


14.2.18 முதல் 10.4.18 வரை விசாகம் நட்சத்திரம் 4-ம் பாதத்தில் உங்கள் ராசிக்கு 4-ம் வீட்டில் குருபகவான் அதிசார வக்கிரமாகச் செல்வதால், சிலருக்கு இடமாற்றம் உண்டாகும். தாயாரின் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக்கொள்ளவும். அடிக்கடி தூக்கமின்மை, நெஞ்சு எரிச்சல் வந்து நீங்கும்.


குருபகவானின் வக்கிர சஞ்சாரம்:


7.3.18 முதல் 3.7.18 வரை தன் சுய சாரமான விசாகம் நட்சத்திரம் துலாம் ராசியில் குருபகவான் வக்கிர கதியில் செல்வதால், வேலைச்சுமையால் உடல் அசதியும் மனச் சோர்வும் ஏற்படக்கூடும். மற்றவர்களின் குடும்ப விவகாரங்களில் தலையிடாதீர்கள். காய்ச்சல், யூரினரி இன்ஃபெக்‌ஷன் வந்து செல்லும். ஆனால், பணப் புழக்கம் அதிகரிக்கும். செல்வாக்கு கூடும்.


வியாபாரத்தில் பழைய சரக்குகளை தள்ளுபடி விலைக்கு விற்றுத் தீர்ப்பீர்கள். யாருக்கும் முன்பணம் தரவேண்டாம். விளம்பரம் செய்து வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். பண விவகாரத்தை நீங்களே கவனிப்பது நல்லது. ஏற்றுமதி - இறக்குமதி, எலெக்ட்ரானிக்ஸ், பெட்ரோகெமிக்கல், பரிசுப்பொருட்கள் விற்பனை போன்றவற்றால் லாபம் உண்டாகும்.


உத்தியோகத்தில் உங்கள் கடமைகளை நிறைவேற்ற கடினமாக உழைப்பீர்கள். சக ஊழியர்களால் உங்கள் பெயர் கெடாமல் பார்த்துக்கொள்ளுங்கள். வேலை விஷயமாக சிலர் வெளிநாடு செல்லும் வாய்ப்பு உண்டாகும். புதிய வாய்ப்புகளை யோசித்தே ஏற்றுக்கொள்ளவும்.


மாணவ மாணவிகளே! தொடக்கத்தில் இருந்தே படிப்பில் கவனம் செலுத்துங்கள்.கஷ்டப்பட்டு படித்தால் மட்டுமே நல்ல மதிப்பெண்கள் பெறமுடியும். கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் பரிசும் பாராட்டும் பெறுவீர்கள்.


கலைத்துறையினரே! விமர்சனங்களும் வதந்திகளும் இருந்துகொண்டுதான் இருக்கும். ஆனாலும், கலைநயம் மிகுந்த உங்களின் படைப்புகள் பட்டிதொட்டி எங்கும் பேசப்படும்.


மொத்தத்தில் இந்த குருப் பெயர்ச்சி உங்களை சிலநேரம் தவிக்க வைத்தாலும், அனுபவ அறிவாலும், கடின உழைப்பாலும் சாதிக்க வைக்கும்.


பரிகாரம்: சித்திரை நட்சத்திர நாளில், சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே உள்ள பட்டமங்கலம் தலத்துக்குச் சென்று ஸ்ரீசுந்தரேஸ்வரரையும், ஸ்ரீதட்சிணாமூர்த்தியை யும் வழிபடுங்கள்; துன்பங்கள் தீரும்.

கன்னி 
சுயக்கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்பவர்களே!


உங்கள் ராசிக்கு தனஸ்தானமான 2-ம் இடத்தில் குருபகவான் 2.9.17 முதல் 2.10.18 வரை அமர்ந்து பலன்களைத் தர இருக்கிறார். மனதில் உற்சாகம் ஏற்படும். பணவரவு அதிகரிக்கும். கொடுத்த கடன் திரும்ப வரும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் நிம்மதியும் நிலவும். கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்திருந்த கணவன் - மனைவி ஒன்று சேருவீர்கள். தடைப்பட்ட கட்டடப் பணியை மீண்டும் தொடங்க வங்கிக் கடனுதவி கிடைக்கும். அடுத்தடுத்த சுபநிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள்.


குருபகவானின் பார்வை:


குரு தனது 5-ம் பார்வையால் உங்கள் ராசிக்கு 6-ம் வீட்டைப் பார்ப்பதால், சாதிக்கவேண்டும் என்ற எண்ணம் மேலோங்கும். அரசால் அனுகூலம் உண்டாகும். பழுதான மின்னணு, மின்சார சாதனங்களை மாற்றுவீர்கள். அதிக சம்பளத்துடன் புது வேலை கிடைக்கும். சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு உண்டாகும். மகளுக்கு நல்ல இடத்தில் வரன் அமையும்.


குரு தனது 7-ம் பார்வையால் உங்கள் ராசிக்கு 8-ம் வீட்டைப் பார்ப்பதால், எதையும் பலமுறை திட்டமிட்டுச் செய்வது நல்லது. உடன்பிறந்தவர்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டாகும். ஒரு சிலருக்கு புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வரும் வாய்ப்பு உண்டாகும். குருபகவான் தனது 9-ம் பார்வையால் உங்கள் ராசிக்கு 10-ம் வீட்டைப் பார்ப்பதால், சவாலான காரியங்களையும் எளிதாக முடித்துக் காட்டுவீர்கள். புதுப் பதவி, பொறுப்புகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். பணிச் சுமை குறையும். சொன்ன சொல்லைக் காப்பாற்றுவீர்கள். ஷேர் மூலமாகப் பணம் வரும்.
குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:


உங்கள் ராசிக்கு 3 மற்றும் 8-ம் வீடுகளுக்கு உரிய செவ்வாயின் சித்திரை நட்சத்திரம் 3,4-ம் பாதம் துலாம் ராசியில் 2.9.17 முதல் 5.10.17 வரை குருபகவான் செல்வதால், அடிக்கடி உணர்ச்சிவசப்படுவீர்கள். சொத்துப் பிரச்னைக்கு சுமுகத் தீர்வு காண்பது நல்லது.


6.10.17 முதல் 7.12.17 வரை ராகுபகவானின் சுவாதி நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால், தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் குழம்புவீர்கள். பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். சிலரால் தர்மசங்கடமான நிலைமைகளைச் சமாளிக்கவேண்டி இருக்கும்.


உங்கள் ராசிக்கு 4 மற்றும் 7-ம் இடங்களுக்கு உரிய குருபகவான் தன் சுய நட்சத்திரமான விசாகம் 1,2,3-ம் பாதம் துலாம் ராசியிலேயே 8.12.17 முதல் 13.2.18 வரை மற்றும் 4.7.18 முதல் 2.10.18 வரை பயணிப்பதால், கணவன் - மனைவிக்குள் வாக்குவாதங்கள் வந்து செல்லும். தாயாருடன் மனவருத்தம் ஏற்படக்கூடும். தாயாரின் உடல் ஆரோக்கியமும் சிறு அளவில் பாதிக்கப்படக்கூடும்.
குருபகவானின் அதிசார வக்கிர சஞ்சாரம்:


14.2.18 முதல் 10.4.18 வரை விசாகம் நட்சத்திரம் 4-ம் பாதத்தில் அதிசார வக்கிரமாகச் செல்வதால், முயற்சிகள் நிறைவேறுவதில் தடை, தாமதம் ஏற்படும். வேலைச்சுமையால் பதற்றம் அதிகரிக்கும். தாழ்வு மனப்பான்மை தலைதூக்கும். சொத்து விஷயத்தில் அவசர முடிவுகள் எடுக்கவேண்டாம். உறவினர்களின் அன்புத் தொல்லை அதிகரிக்கும். சிலருக்கு தலைச்சுற்றல், தோலில் அலர்ஜி வந்து செல்லும்.


குருபகவானின் வக்கிர சஞ்சாரம்:


7.3.18 முதல் 3.7.18 வரை தன் சுய நட்சத்திரமான விசாகம் நட்சத்திரத்தில் வக்கிரகதியில் செல்வதால், தன்னம்பிக்கை அதிகரிக்கும். கணவன் - மனைவிக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும்.திருமணம் தடைப்பட்டவர்களுக்கு திருமணம் கூடிவரும். போட்டித் தேர்வுகளில் வெற்றி உண்டாகும்.


வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். சந்தை நிலவரத்தையும், வாடிக்கையாளர்களின் ரசனையையும் புரிந்துகொண்டு முதலீடு செய்வீர்கள். அனுபவம் மிக்க வேலையாட்களை பணியில் அமர்த்துவீர்கள். கடையை விரிவுபடுத்தி அழகுபடுத்துவீர்கள். நல்ல பங்குதாரர்கள் அமைவார்கள். கமிஷன், துரித உணவகம், ஸ்டேஷனரி, கட்டுமானம் வகைகளால் லாபம் உண்டாகும்.


உத்தியோகத்தில் இனி உங்களுக்கு உரிய முக்கியத்துவம் கிடைக்கும். பதவி உயர்வும், சம்பள உயர்வும் கிடைக்கும். தற்காலிகப் பணியில் இருப்பவர்களுக்கு பணி நிரந்தரம் ஆகும். எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். அதிக சம்பளத்துடன் நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும்.


மாணவ மாணவிகளே! படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். எழுத்துப் போட்டி, ஓவியப் போட்டிகளில் கலந்துகொண்டு பரிசும் பாராட்டும் பெறுவீர்கள். தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெறுவீர்கள்.


கலைத்துறையினரே! சின்னச் சின்ன வாய்ப்புகளைக் கடந்து இப்போது பெரிய வாய்ப்புகளும் வரும். பிரபல கலைஞர்களால் பாராட்டப்படுவீர்கள். முடங்கிக் கிடந்த உங்களின் படைப்புகள் வெளியாகி புகழ் பெறுவீர்கள்.


மொத்தத்தில் இந்த குருப் பெயர்ச்சி உங்களை விஸ்வரூபம் எடுக்க வைப்பதுடன், நினைத்ததை நிறைவேற்றும் வல்லமையைத் தருவதாகவும் அமையும்.


பரிகாரம்: பெளர்ணமி திதியில் தக்கோலம் தலத்துக்குச் சென்று, அங்கே அருளும் ஸ்ரீஜலநாதீஸ்வரர், ஸ்ரீநர்த்தன தட்சிணாமூர்த்தி ஆகிய இருவரையும் வழிபடுங்கள்; வளம் பெருகும்.

துலாம் 
நடுநிலைமை தவறாதவர்களே!


மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்பவர்களே! குருபகவான் 2.9.17 முதல் 2.10.18 வரை உங்கள் ராசியில் ஜன்ம குருவாக அமர்வதால், கூடுமானவரை சகிப்புத்தன்மையுடன் நடந்துகொள்வது நல்லது. அடுத்தடுத்து வேலைச் சுமை இருந்துகொண்டே இருக்கும். கணவன் - மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. நல்ல நண்பர்களை மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்தி வைக்கவேண்டாம். சிலருக்கு உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படக்கூடும்.
குருபகவானின் பார்வை:


குருபகவான் தனது 5-ம் பார்வையால் உங்கள் ராசிக்கு 5-ம் இடத்தைப் பார்ப்பதால், எதிலும் தெளிவு பிறக்கும். சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். மகளின் திருமணத்தை நல்லபடி நடத்திக் காட்டுவீர்கள். மகனுக்கு நல்ல சம்பளத்தில் எதிர்பார்த்த நிறுவனத்தில் வேலை கிடைக்கும்.குடும்பத்தினருடன் சென்று குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள்.குருபகவான் தன் 7-ம் பார்வையால் உங்கள் ராசிக்கு 7-ம் இடத்தைப் பார்ப்பதால், நீண்டநாள் பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பீர்கள். விலை உயர்ந்த தங்க நகைகள் வாங்குவீர்கள். ஜன்ம குருவால் கணவன் - மனைவிக்கு இடையில் சின்னச் சின்ன கசப்பு உணர்வுகள் ஏற்பட்டாலும், அன்பு குறையாது. ஒருவரின் முயற்சிக்கு மற்றவர் உறுதுணையாக இருப்பார்.


குருபகவான் தனது 9-ம் பார்வையால் 9-ம் வீட்டைப் பார்ப்பதால், எதிர்பார்ப்புகள் தடையின்றி நிறைவேறும். பாதியில் நின்ற வேலைகள் முடியும். வரவேண்டிய பணம் கைக்கு வந்து சேரும். தந்தையாரின் உடல் ஆரோக்கியம் மேம்படும். பிதுர்வழிச் சொத்துப் பிரச்னை முடிவுக்கு வரும். வெளிவட்டாரத்தில் மதிப்பு கூடும். காணாமல் போன முக்கிய ஆவணம் கிடைக்கும்.
குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:


உங்கள் ராசிக்கு 2 மற்றும் 7-ம் இடத்துக்கு உரிய செவ்வாயின் சித்திரை நட்சத்திரம் 3,4-ம் பாதம் துலாம் ராசியில் 2.9.17 முதல் 5.10.17 வரை குருபகவான் செல்வதால், பணவரவு அதிகரிக்கும். அதிகாரிகளின் அறிமுகம் கிடைக்கும். குடும்பத்தில் நிம்மதி ஏற்படும். புது வேலை அமையும். ஆனாலும், வாழ்க்கைத் துணையுடன் விவாதங்கள், அவருக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படக் கூடும்.


6.10.17 முதல் 7.12.17 வரை ராகு பகவானின் சுவாதி நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால்,நெஞ்சு வலி, மூச்சுத் திணறல் வந்து செல்லும். சுபச் செலவுகள் அதிகரிக்கும். பிற மொழி பேசுபவர்களால் திடீர் திருப்பம் உண்டாகும்.ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும்.


உங்கள் ராசிக்கு 3 மற்றும் 6-க்கு உடைய குருபகவான் தன் சுயநட்சத்திரமான விசாகம் 1,2,3-ம் பாதம் துலாம் ராசியிலேயே 8.12.17 முதல் 13.2.18 வரை மற்றும் 4.7.18 முதல் 2.10.18 வரை பயணிப்பதால், தடைகளையும் கடந்து முன்னேறுவீர்கள். கடன் பிரச்னைகள் கவலை தரும். ஆனாலும், வசதி வாய்ப்புகள் கூடும்.


குருபகவானின் அதிசார வக்கிர சஞ்சாரம்:


14.2.18 முதல் 10.4.18 வரை விசாகம் நட்சத்திரம் 4-ம் பாதத்தில் அதிசார வக்கிரத்தில் உங்கள் ராசிக்கு 2-ல் அமர்வதால், நோய்களில் இருந்து விடுபடுவீர்கள். ஆளுமைத் திறன் அதிகரிக்கும். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். பிரிந்திருந்த கணவன் - மனைவி ஒன்று சேருவீர்கள். வசதியான வீட்டுக்குக் குடிபுகுவீர்கள். சுபநிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும்.


குருபகவானின் வக்கிர சஞ்சாரம்:


7.3.18 முதல் 3.7.18 வரை தன் சுய நட்சத்திரமான விசாகம் நட்சத்திரம் துலாம் ராசியில் குருபகவான் வக்கிர கதியில் செல்வதால், குடும்பத்தில் வாக்குவாதங்கள் வந்து செல்லும். வேலைச்சுமை அதிகரிக்கும். திடீர்ப் பயணங்களும் ஏற்படும். கடனாகக் கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும்.


வியாபாரத்தில் லாபம் சுமாராகத்தான் இருக்கும். போட்டிகளைச் சமாளிக்க முடியாமல் திணறுவீர்கள். வாடிக்கையாளர்களைக் கவர விளம்பரங்களில் செலவிடுவீர்கள். அனுபவம் மிக்க வேலையாட்கள் பணியில் இருந்து விலகுவார்கள். பங்குதாரர்களால் பிரச்னை ஏற்படும். புரோக்கரேஜ், ஸ்பெக்குலேஷன், பிளாஸ்டிக், கன்சல்டன்சி, ஏற்றுமதி வகைகளால் லாபம் அடைவீர்கள்.


உத்தியோகத்தில் நீங்கள் பொறுப்பாக நடந்துகொண்டாலும் மேலதிகாரி குறை கூறத்தான் செய்வார். மேலதிகாரிகளிடம் பணிவாக நடந்துகொள்ளவும். எதிர்பார்த்த இடமாற்றம், சம்பள உயர்வு போன்றவற்றைப் போராடித்தான் பெறவேண்டி இருக்கும்.


மாணவ மாணவிகளே! உங்களுடைய திறமைகளை வெளிப்படுத்த கடின முயற்சி அவசியம். அடிக்கடி விடுமுறை எடுக்கவேண்டாம். சந்தேகங்களை உடனுக்குடன் ஆசிரியர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.


கலைத்துறையினரே! வரும் என்று நினைத்த வாய்ப்புகள் கை நழுவிப் போகும். இளைய கலைஞர்களிடம் இருந்து உதவிகள் கிடைக்கும். உங்களின் படைப்புகளைப் போராடி வெளியிடவேண்டி வரும்.


மொத்தத்தில் இந்த குரு மாற்றம் சற்றே சோதனைகளைத் தந்தாலும், விட்டுக்கொடுத்துப் போவதன் மூலம் காரியம் சாதிக்க வைக்கும்.


பரிகாரம்: வளர்பிறை மூன்றாம் பிறை நாளில், ஆலங்குடியில் வீற்றிருக்கும் ஸ்ரீஆபத்சகாயேஸ்வரரையும், குரு பகவானையும் வழிபடுங்கள். தடைகள் நீங்கும்.

விருச்சிகம்
மனசாட்சிக்கு மதிப்பளித்து நடப்பவர்களே!


உங்கள் ராசிக்கு விரயஸ்தானமாகிய 12-ம் வீட்டில் குருபகவான் 2.9.17 முதல் 2.10.18 வரை அமர்வதால், சவால்களைச் சந்திக்கவேண்டி வரும். எவ்வளவுதான் பணம் வந்தாலும் சேமிக்கமுடியாதபடி செலவுகளும் துரத்தும். கணவன் - மனைவிக்குள் கருத்துவேறுபாடு ஏற்பட்டு நீங்கும். பூர்வீகச் சொத்துப் பிரச்னைக்கு சுமுகமாகத் தீர்வு காண முயற்சிக்கவும். பணப் பற்றாக்குறையின் காரணமாக வெளியில் கடன் வாங்கவும் நேரிடும். வீடு கட்ட வங்கிக் கடனுதவி கிடைக்கும்.
குருபகவானின் பார்வை


குருபகவான் தன் 5-ம் பார்வையால் உங்கள் ராசிக்கு 4-ம் வீட்டைப் பார்ப்பதால், எத்தனை நெருக்கடிகள் வந்தாலும் சமாளிக்கும் சக்தி கிடைக்கும். தாயாரின் ஆரோக்கியம் சீராகும். தாய்வழி சொத்துப் பிரச்னை முடிவுக்கு வரும். வசதியான வீட்டுக்குக் குடிபுகுவீர்கள். அரசால் அனுகூலம் உண்டாகும்.


உங்கள் ராசிக்கு 6-ம் வீட்டை குருபகவான் தனது 7-ம் பார்வையால் பார்ப்பதால், எடுத்த வேலைகளை முடிக்காமல் விடமாட்டீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். உங்களை நம்பி புதுப் பொறுப்புகள் ஒப்படைக்கப்படும்.


குருபகவான் தனது 9-ம் பார்வையால் உங்களின் 8-ம் வீட்டைப் பார்ப்பதால், எதிர்காலம் குறித்து யோசிப்பீர்கள். சுபநிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். மகளுக்கு நல்ல வரன் அமையும். உறவினர்களால் அன்புத் தொல்லைகள் அதிகரிக்கும். குடும்பத்தினருடன் சுற்றுலா சென்று வருவீர்கள்.பூர்வீகச் சொத்துப் பங்கு கைக்கு வரும்.
குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:


உங்கள் ராசிநாதனும், 6-ம் வீட்டுக்கு அதிபதியுமான செவ்வாயின் சித்திரை நட்சத்திரம் 3,4-ம் பாதம் துலாம் ராசியில் குருபகவான் செல்வதால், சவால்களில் வெற்றி பெறுவீர்கள். பேச்சில் கம்பீரம் பிறக்கும். குடும்ப வருமானத்தை உயர்த்துவீர்கள். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். சகோதரர்கள் உங்கள் வளர்ச்சிக்குப் பக்கபலமாக இருப்பார்கள்.


6.10.17 முதல் 7.12.17 வரை ராகு பகவானின் சுவாதி நட்சத்திரத்தில் குருபகவான் செல்வ தால் மனோபலம் அதிகரிக்கும். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். சுப நிகழ்ச்சிகள், பொது விழாக்களில் முதல் மரியாதை கிடைக்கும். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும்.


உங்களின் ராசிக்கு 2 மற்றும் 5-ம் வீடுகளுக்கு உரிய குருபகவான் தன் சுய நட்சத்திரமான விசாகம் 1,2,3-ம் பாதம் துலாம் ராசியிலேயே 8.12.17 முதல் 13.2.18 வரை மற்றும் 4.7.18 முதல் 2.10.18 வரை பயணிப்பதால், குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். கணவன் - மனைவிக்கு இடையில் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் மறையும். பணப்புழக்கம் அதிகரிக்கும். சுபநிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும்.


குருபகவானின் அதிசார வக்கிர சஞ்சாரம்:


14.2.18 முதல் 10.4.18 வரை விசாகம் நட்சத்திரம் 4-ம் பாதத்தில் அதிசார வக்கிரத்தில் உங்கள் ராசியிலேயே செல்வதால், உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படக்கூடும். குடும்பத்தில் கணவன் - மனைவிக்குள் பிரிவுகள் ஏற்படக்கூடும். கர்ப்பிணிப் பெண்கள் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. பணம் எவ்வளவு வந்தாலும் செலவுகளும் அதிகரிக்கும்.


குருபகவானின் வக்ர சஞ்சாரம்:


7.3.18 முதல் 3.7.18 வரை தன் சுய சாரமான விசாகம் நட்சத்திரம் துலாம் ராசியில் குருபகவான் வக்கிர கதியில் செல்வதால், கடன் பிரச்னை கட்டுக்குள் வரும். செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். புதியவர்களின் நட்பால் உற்சாகம் அடைவீர்கள். மகான்கள், சித்தர்களைச் சந்தித்து ஆசி பெறுவீர்கள்.


வியாபாரத்தில் சில நுணுக்கங்களைக் கற்றுக்கொள்வீர்கள். போட்டிகளைச் சமாளிக்க புதிய திட்டங்களை நடைமுறைப்படுத்துவீர்கள். வேலையாட்களை அனுசரித்து நடந்து கொள்ளவும்.விளம்பர யுக்திகளாலும், தள்ளுபடி அறிவித்தும் பழைய சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள். கடன் வாங்கி வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். வெளிநாட்டில் இருப்பவர்களுடன் புது ஒப்பந்தம் செய்துகொள்வீர்கள்.


உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். மற்றவர்களின் வேலையையும் இழுத்துப் போட்டுச் செய்வீர்கள். மூத்த அதிகாரிகள் தங்களை பாதுகாத்துக் கொள்ள உங்கள் மீது பழி சுமத்துவார்கள். சம்பள உயர்வு உண்டு. சிலருக்கு வெளிமாநிலத்தில் அல்லது அயல்நாட்டில் வேலை அமையும்.


மாணவ மாணவிகளே! படிப்பில் கவனம் தேவை. அலட்சியம் காட்டினால் உங்கள் நண்பர்கள் அதிக மதிப்பெண்கள் எடுத்துவிடுவார்கள். தெரியாத விஷயங்களை ஆசிரியரிடம் கேட்டுத் தெளிவு பெறுங்கள். ஆய்வகப் பரிசோதனைகளில் கவனமாக இருக்கவும்.


கலைத்துறையினர்களே! உங்களின் படைப்புகளை மற்றவர்களிடம் சொல்லாதீர்கள். மூத்த கலைஞர்களின் நட்பால் ஆதாயம் உண்டாகும். உங்களுடைய கற்பனைத் திறன் வளரும்.


இந்த குருப் பெயர்ச்சி அலைச்சல், செலவினங்களைத் தந்தாலும், சந்தர்ப்பச் சூழ்நிலைக்குத் தகுந்தாற்போல் நடந்துகொண்டு முன்னேற வைக்கும்.


பரிகாரம்: சஷ்டி திதியன்று திருச்செந்தூர் ஸ்ரீமுருகப் பெருமானையும், ஸ்ரீதட்சிணா மூர்த்தியையும் வணங்கி வழிபட்டு வாருங்கள். மகிழ்ச்சி பொங்கும்.

தனுசு
எதிலும் தனித்து நிற்பவர்களே!


உங்கள் ராசிக்கு லாபஸ்தானமாகிய 11-ம் வீட்டில் குருபகவான் 2.9.17 முதல் 2.10.18 வரை அமர்வதால், கடினமான வேலைகளையும் எளிதாக முடித்துக் காட்டுவீர்கள். சுபநிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். கணவன் - மனைவிக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்தியோகம் தொடர்பான முயற்சிகள் சாதகமாக முடியும். அரசாங்கக் காரியங்கள் சாதகமாக முடியும். வழக்குகள் சாதகமாகும்.
குருபகவானின் பார்வை:


குருபகவான் தனது 5-ம் பார்வையால் ராசிக்கு 3-ம் வீட்டைப் பார்ப்பதால், நினைத்தது நிறைவேறும். மனதில் தைரியம் கூடும். மற்றவர்களை நம்பி எந்த வேலைகளையும் ஒப்படைக்கக் கூடாது என்ற முடிவுக்கு வருவீர்கள். இளைய சகோதர வகையில் அனுகூலம் உண்டாகும். சிலருக்கு அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும்.


குருபகவான் தனது 7-ம் பார்வையால் ராசிக்கு 5-ம் வீட்டைப் பார்ப்பதால், மகளின் திருமணத்தை சிறப்பாக நடத்துவீர்கள். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். சுபநிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். சிந்தனையில் தெளிவு பிறக்கும். குடும்பத்தினருடன் சென்று குலதெய்வ பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள்.


குருபகவான் தனது 9-ம் பார்வையால் ராசிக்கு 7-ம் வீட்டைப் பார்ப்பதால், உங்களுடைய தனித் திறமை வெளிப்படும். வாழ்க்கைத்துணைக்கு புது வேலை அமையும். உறவினர்கள் மத்தியில் செல்வாக்குக் கூடும். பிரபலங்கள் நண்பர்கள் ஆவார்கள். விலை உயர்ந்த ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். சிலருக்கு புதுத் தொழில் தொடங்கும் வாய்ப்பு உண்டாகும்.
குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:


உங்கள் ராசிக்கு 5 மற்றும் 12-ம் இடங்களுக்கு உரிய செவ்வாயின் சித்திரை நட்சத்திரம் 3,4-ம் பாதம் துலாம் ராசியில் குருபகவான் 2.9.17 முதல் 5.10.17 வரை செல்வதால், மாறுபட்ட சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகளால் உறவினர்கள் மத்தியில் மதிப்புக் கூடும். உடன்பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். வழக்குகளில் வெற்றி உண்டு.


6.10.17 முதல் 7.12.17 வரை ராகு பகவானின் சுவாதி நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் உங்களின் புகழ், கௌரவம் உயரும். பிதுர்வழி சொத்து கைக்கு வரும். அரசால் அனுகூலம் உண்டு. வாழ்க்கைத்துணை வழியில் நல்ல செய்தி உண்டு. பால்ய நண்பர்களால் ஆதாயமடைவீர்கள்.


உங்களின் ராசிநாதனும், சுகாதிபதியுமான குருபகவான் தன் சுய நட்சத்திரமான விசாகம் 1, 2, 3-ம் பாதம் துலாம் ராசியிலேயே 8.12.17 முதல் 13.2.18 மற்றும் 4.7.18 முதல் 2.10.18 வரை பயணிப்பதால், உங்களுடைய ஆளுமைத் திறன் அதிகரிக்கும். தினந்தோறும் எதிர்பார்த்து ஏமாந்த தொகை கைக்கு வரும். தாயார் மற்றும் தாய்வழி உறவினர்களால் திடீர் நன்மைகள் உண்டாகும்.


குருபகவானின் அதிசார வக்கிர சஞ்சாரம்:


14.2.18 முதல் 10.4.18 வரை விசாகம் நட்சத்திரம் 4-ம் பாதத்தில் அதிசார வக்கிரமாக உங்கள் ராசிக்கு 12-ம் வீட்டில் குருபகவான் சென்று மறைவதால், சுபச் செலவுகள் அதிகரிக்கும். குடும்பத்திலும் சலசலப்புகள் உண்டாகும். வேலைச் சுமையால் டென்ஷன் அதிகரிக்கும். கடன் பிரச்னைகளால் கலக்கம் உண்டாகும்.


குருபகவானின் வக்கிர சஞ்சாரம்:


7.3.18 முதல் 3.7.18 வரை தன் சுய சாரமான விசாகம் நட்சத்திரம் துலாம் ராசியில் குருபகவான் வக்கிர கதியில் செல்வதால், விமர்சனங்களைப் பொறுமையாக ஏற்றுக்கொள்ளவும். சிலர் வீடு மாறவேண்டிய நிலையும் ஏற்படும். முதுகுத்தண்டில் வலி, ஒற்றைத் தலைவலி வந்து செல்லும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும்.


வியாபாரத்தில் பற்று வரவு உயரும். புது முதலீடுகள் செய்து வியாபாரத்தை நவீனமாக்குவீர்கள். வேலையாட்களிடம் கண்டிப்பாக இருக்கவும். வி.ஐ.பி.க்களும் வாடிக்கையாளர்களாக வருவார்கள். அரசு கெடுபிடிகள் தளரும். நகை, ஆடை, ஆட்டோ மொபைல் உதிரிபாகங்கள் வகைகளில் லாபம் உண்டாகும்.


உத்தியோகத்தில் மரியாதை கூடும். பணிகளை விரைந்து முடிப்பீர்கள். உயரதிகாரிகளின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். அவர் உங்கள் ஆலோசனைகளை ஏற்றுக்கொள்வார். சக ஊழியர்களும் உங்களுடைய புது முயற்சிகளை ஆதரிப்பார்கள். சம்பள உயர்வு, பதவி உயர்வு போன்ற சலுகைகள் கிடைக்கும்.


மாணவ மாணவிகளே! சக மாணவர்களால் பாராட்டப்படுவீர்கள். உயர்கல்வியில் விரும்பிய பாடப்பிரிவில் இடம் கிடைக்கும். சிலருக்கு வெளிநாடு சென்று படிக்கும் வாய்ப்பும் அமையும்.


கலைத்துறையினரே! இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். வெளிவராமல் இருந்த உங்களுடைய படைப்புகள் வெளியாவதற்கு சில முக்கிய பிரமுகர்களின் உதவி கிடைக்கும். விருதுகளுக்கு உங்களுடைய பெயர் பரிந்துரைக்கப்படும்.


மொத்தத்தில் இந்த குரு மாற்றம் தோல்விகளால் துவண்டுக் கிடந்த உங்களை சிலிர்த்தெழச் செய்வதுடன், வசதி வாய்ப்புகளையும் அள்ளித் தருவதாக அமையும்.


பரிகாரம்: தசமி திதியன்று, கும்பகோணத்துக்கு அருகேயுள்ள தேப்பெருமாநல்லூரில் அருளும் ஸ்ரீவிஸ்வநாதரையும், ஸ்ரீஅன்னதான குருவையும் வணங்குங்கள்; தொட்டது துலங்கும்.

மகரம் 
தோல்விகளால் சோர்வு அடையாதவர்களே!


உங்கள் ராசிக்கு 10-ம் இடத்தில் 2.9.17 முதல் 2.10.18 வரை குருபகவான் அமர்வதால், வேலைகளை திட்டமிட்டபடி முடிக்க முடியாது. உழைப்புக்கான அங்கீகாரமோ பாராட்டோ கிடைக்காது. பல வேலைகளையும் நீங்களே பார்க்கவேண்டி வரும். தன்னம்பிக்கை குறையும். கணவன் - மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடும். சிலர் பணியின் காரணமாக குடும்பத்தைப் பிரிந்து செல்ல நேரிடும்.
குருபகவானின் பார்வை:


குருபகவான் தனது 5-ம் பார்வையால் உங்கள் ராசிக்கு 2-ம் இடத்தைப் பார்ப்பதால், பணப்புழக்கம் அதிகரிக்கும். சுபநிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். வி.ஐ.பி.களை சரியாகப் பயன்படுத்திக் கொள்வீர்கள். சிலருக்கு புது வேலை கிடைக்கும். திடீரென்று அறிமுகமாகும் நபர்களால் ஆதாயம் உண்டாகும்.


குருபகவான் தன் 7-ம் பார்வையால் ராசிக்கு 4-ம் வீட்டைப் பார்ப்பதால், தாயாரின் ஆதரவு கிடைக்கும். வீடு, வாகனத்தைச் சீர் செய்வீர்கள். வீடு, மனை வாங்கக் கடனுதவி கிடைக்கும். வழக்குகள் சாதகமாகும். சிலருக்கு இடமாற்றம் உண்டாகும்.


குருபகவான் தன் 9-ம் பார்வையால் உங்களின் 6-ம் வீட்டைப் பார்ப்பதால், செயலில் வேகம் கூடும். தொலைநோக்குச் சிந்தனை அதிகரிக்கும். செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்கு வீர்கள். மறைமுக எதிரிகளால் ஆதாயம் உண்டாகும்.
குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:


உங்கள் ராசிக்கு 4 மற்றும் 11 ஆகிய இடங்களுக்கு உரிய செவ்வாயின் சித்திரை நட்சத்திரம் 3,4-ம் பாதம் துலாம் ராசியில் 2.9.17 முதல் 5.10.17 வரை குருபகவான் செல்வதால், உயர் பதவிகளில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். சகோதரர்கள் உதவியாக இருப்பார்கள். வழக்கில் தீர்ப்பு சாதகமாகும்.


6.10.17 முதல் 7.12.17 வரை ராகு பகவானின் சுவாதி நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால், எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். திருமணம் கூடி வரும். உத்தி யோகத்தில் விரும்பத் தகாத இடமாற்றம் வந்து செல்லும்.


உங்கள் ராசிக்கு 3, 12-ம் இடங்களுக்கு உரிய குருபகவான் தன் சுய நட்சத்திரமான விசாகம் நட்சத்திரம்1,2,3-ம் பாதம் துலாம் ராசியிலேயே 8.12.17 முதல் 13.2.18 வரை மற்றும் 4.7.18 முதல் 2.10.18 வரை பயணிப்பதால், சுபநிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். பணப்பற்றாக்குறை ஏற்பட்டாலும் கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும். இளைய சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும்.


உங்களின் ராசிக்கு 3, 12-ம் இடங்களுக்கு உரிய குருபகவான் தன் சுய நட்சத்திரமான விசாகம் 1,2,3-ம் பாதம் துலாம் ராசியிலேயே 8.12.17 முதல் 13.2.18 வரை மற்றும் 4.7.18 முதல் 2.10.18 வரை பயணிப்பதால், மனதில் ஒருவித அச்ச உணர்வு வந்து செல்லும். அரசாங்கத்தால் நெருக்கடிகள் வந்து நீங்கும். இளைய சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும்.
குருபகவானின் அதிசார வக்கிர சஞ்சாரம்:


14.2.18 முதல் 10.4.18 வரை விசாகம் நட்சத்திரம் 4-ம் பாதத்தில் அதிசார வக்கிரத்தில் உங்கள் ராசிக்கு 11-ம் வீட்டில் குருபகவான் அமர்வதால், புகழ், கௌரவம் கூடும். பணப்புழக்கம் அதிகரிக்கும். தினந்தோறும் எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். கணவன் - மனைவிக்கு இடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வரும் வாய்ப்பு உண்டாகும்.


குருபகவானின் வக்கிர சஞ்சாரம்:


7.3.18 முதல் 3.7.18 வரை தன் சுய சாரமான விசாகம் நட்சத்திரம் துலாம் ராசியில் குருபகவான் வக்கிர கதியில் செல்வதால், புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்கு எதிர்பார்த்த நிறுவனத்தில் வேலை கிடைக்கும். பயணங்களால் ஆதாயமடைவீர்கள்.


வியாபாரம் சுமாராகத்தான் இருக்கும். வாடிக்கையாளர்கள் அதிருப்தி அடைவார்கள். அறிமுகம் இல்லாத தொழில்களில் முதலீடு செய்யவேண்டாம். வியாபார விஷயங்களை சமாதானமாகப் பேசி முடித்துக் கொள்வது நல்லது.சிமென்ட், மரம், கடல்வாழ் உயிரினங்கள், இரும்பு வகைகளால் ஆதாயம் உண்டாகும்.


உத்தியோகஸ்தானமான 10-ம் வீட்டில் குரு அமர்வதால், உங்கள் உழைப்புக்கு வேறு சிலர் உரிமை கொண்டாடுவர். உத்தியோகம் சம்பந்தப்பட்ட வழக்குகளில் இழுபறி நிலையே நீடிக்கும். மறைமுக எதிர்ப்புகள், வீண் பழிச்சொல், திடீர் இடமாற்றங்கள் ஏற்படக்கூடும்.


மாணவ மாணவிகளே! படிப்பில் கூடுதல் கவனம் செலுத்தவேண்டும். தினமும் நடத்தும் பாடங்களை அன்றே படித்துவிடுவது நல்லது. மொழிப் பாடங்களில் கூடுதல் கவனம் செலுத்தப் பாருங்கள். விளையாட்டுத்தனத்தை குறைத்துக்கொள்ளுங்கள்.


கலைத்துறையினர்களே! இழந்த புகழை மீண்டும் பெற யதார்த்தமான படைப்புகளைக் கொடுக்கவும். மூத்த கலைஞர்களின் நட்பால் முன்னேற்றம் உண்டாகும்.


இந்த குரு மாற்றம் உங்களின் முன்னேற்றப் பாதையில் சிறுசிறு தடைகளை ஏற்படுத்தினாலும், உங்களை கொஞ்சம் செம்மைப்படுத்துவதாக அமையும்.


பரிகாரம்:புனர்பூசம் நட்சத்திர நாளில், அரியலூர் மாவட்டம் திருமழபாடி எனும் ஊரில் அருள்பாலிக்கும் ஸ்ரீவைத்தியநாத சுவாமி கோயிலுக்குச் சென்று வழிபட்டு வாருங்கள்; வாழ்வில் திருப்பம் உண்டாகும்.

கும்பம் 
ஏற்றத்தாழ்வுகளைக் கண்டு அஞ்சாதவர்களே!


உங்கள் ராசிக்கு 2.9.17 முதல் 2.10.18 வரை குருபகவான் 9-ம் இடத்தில் அமர்ந்து பலன் தர இருக்கிறார். வாழ்க்கையின் நெளிவுசுளிவுகளைக் கற்றுக்கொள்வீர்கள். பேச்சில் கனிவு பிறக்கும். முடியாத காரியங்களையும் முடித்துக் காட்டுவீர்கள். தினம்தோறும் எதிர்பார்த்து ஏமாந்த தொகை கைக்கு வரும். கணவன் - மனைவிக்கு இடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். புகழ் பெற்ற புண்ணியஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். மகனுக்கு நல்ல வேலை அமையும். மகளுக்கு நல்ல வரன் அமையும்.
குருபகவானின் பார்வை:


குருபகவான் தனது 5-ம் பார்வையால் உங்கள் ராசியைப் பார்ப்பதால் தோற்றப் பொலிவு கூடும். புது டிசைனில் ஆபரணம் வாங்குவீர்கள். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். சிலர் உங்களை நம்பி முக்கியப் பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். பங்குச் சந்தை மூலமாக பணம் வரும்.


குரு பகவான் 7-ம் பார்வையால் உங்கள் ராசிக்கு 3-ம் வீட்டைப் பார்ப்பதால்,தைரியம் கூடும். சொத்துப் பிரச்னைக்கு சுமுகத் தீர்வு காண்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். அதிகாரிகளின் நட்பு கிடைக்கும். பொதுக் காரியங்களை முன்னின்று நடத்துவீர்கள்.


குருபகவான் தனது 9-ம் பார்வையால் உங்களின் 5-ம் வீட்டைப் பார்ப்பதால் சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். மகனின் உயர்கல்வி, உத்தியோகம், திருமணம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் நல்ல விதத்தில் முடியும். விலை உயர்ந்த மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும்.
குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:


உங்கள் ராசிக்கு 3 மற்றும் 10-ம் இடங்களுக்கு உரிய செவ்வாயின் சித்திரை நட்சத்திரம் 3,4-ம் பாதம் துலாம் ராசியில் குருபகவான் பயணிப்பதால், சவால்களில் வெற்றி பெறுவீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். பிதுர்வழிச் சொத்து கைக்கு வரும்.


6.10.17 முதல் 7.12.17 வரை ராகு பகவானின் சுவாதி நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால், ஒருவித தயக்கம், படபடப்பு, எதிர்காலம் குறித்த பயம், தாழ்வுமனப்பான்மை வந்து செல்லும். பிற மொழி பேசுபவர்கள் உதவிகரமாக இருப்பார்கள். அயல்நாட்டில் இருக்கும் நண்பர்கள், உறவினர்களால் நன்மை உண்டாகும்.


உங்களின் ராசிக்கு 2 மற்றும் 11-ம் வீடுகளுக்கு உரிய குருபகவான் தன் சுய நட்சத்திரமான விசாகம் 1,2,3-ம் பாதம் துலாம் ராசியிலேயே 8.12.17 முதல் 13.2.18 வரை மற்றும் 4.7.18 முதல் 2.10.18 வரை பயணிப்பதால் வசதி வாய்ப்புகள் பெருகும். குடும்பத்தில் நல்ல நிகழ்ச்சிகள் நடக்கும். அரசு காரியங்கள் அனுகூலமாக முடியும். திருமணம் கூடி வரும்.


குருபகவானின் அதிசார வக்கிர சஞ்சாரம்:


14.2.18 முதல் 10.4.18 வரை விசாகம் நட்சத்திரம் 4-ம் பாதத்தில் அதிசார வக்கிரத்தில் உங்கள் ராசிக்கு 10-ம் வீட்டில் குருபகவான் சென்று அமர்வதால், வேலைச் சுமை அதிகரிக்கும். உத்தியோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் ஏற்படும். இடமாற்றங்கள் உண்டாகும். தர்மசங்கடமான சூழ்நிலை ஏற்படும். அரசாங்கத்தால் நெருக்கடிகள் ஏற்பட்டு நீங்கும்.


குருபகவானின் வக்கிர சஞ்சாரம்:


7.3.18 முதல் 3.7.18 வரை தன் சுய சாரமான விசாகம் நட்சத்திரம் துலாம் ராசியில் குருபகவான் வக்கிர கதியில் செல்வதால், எதிர்பார்ப்புகள் சற்று தாமதமாகி முடியும். அடிக்கடி மனதில் குழப்பம் ஏற்படும். மற்றவர்கள் தன்னிடம் அன்பாக நடந்துகொள்ளவில்லையே என்று ஆதங்கப்படுவீர்கள்.


வியாபாரத்தில் இருந்த தேக்க நிலை மாறும். லாபத்தை அதிகரிக்கும் சூட்சுமத்தைப் புரிந்துகொள்வீர்கள். கடையை விரிவுபடுத்துவீர்கள். எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். சிலர் சில்லரை வியாபாரத்தில் இருந்து மொத்த வியாபாரத்துக்கு மாறுவீர்கள். எலெக்ட்ரானிக்ஸ், போர்டிங், லாட்ஜிங், ஸ்டேஷனரி, அழகுச் சாதனப் பொருள்களால் ஆதாயம் அடைவீர்கள்.


உத்தியோகத்தில் அலுவலகச் சூழ்நிலை நிம்மதி தரும். உங்களின் நிர்வாகத் திறமை பளிச்சிடும். அதிகாரிகளின் பாராட்டுகள் கிடைக்கும். சிலருக்கு வேறு நல்ல வாய்ப்புகள் வரும். சம்பள பாக்கி கைக்குக் கிடைக்கும். புதிய உரிமையாளர்கள் மூலமாக உங்களுக்குக் கூடுதல் சம்பளம் கிடைக்கும்.


மாணவ மாணவிகளே! படிப்பில் முன்னேறுவீர்கள். பொது அறிவை வளர்த்துக்கொள்வீர்கள். எதிர்பார்த்த நிறுவனத்தில் உயர்கல்வி அமையும். கலை, இலக்கியப் போட்டிகளில் வெற்றி பெறுவீர்கள்.


கலைத்துறையினர்களே! வேற்று மொழி வாய்ப்புகளால் புகழ் அடைவீர்கள். பொது நிகழ்ச்சிகளில் தலைமை தாங்கும் அளவுக்குப் பிரபலமாவீர்கள். மூத்த கலைஞர்களிடம் சில நுணுக்கங்களைக் கற்றுக்கொள்வீர்கள்.


இந்த குரு மாற்றம் மன நிம்மதியைத் தருவதுடன், எதிலும் வெற்றி பெறுவோம் என்ற தன்னம்பிக்கையை அதிகப்படுத்துவதாக அமையும்.


பரிகாரம்: பூசம் நட்சத்திர நாளில், சிதம்பரம் அருகிலுள்ள ஓமாம்புலியூர் எனும் ஊரில் அருளும் ஸ்ரீபிரணவ வியாக்ரபுரீஸ்வரரையும் தட்சிணாமூர்த்தியையும் வில்வ அர்ச்சனை செய்து வழிபடுங்கள்; சுபிட்சம் உண்டாகும்.

மீனம் 
எப்போதும் நல்லவழியில் செல்பவர்களே!


குருபகவான் 2.9.17 முதல் 2.10.18 வரை உங்கள் ராசிக்கு 8-ல் அமர்ந்து பலன்களைத் தர இருக்கிறார். அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டாகும். எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் உண்டாகும். அறிவுப்பூர்வமாக சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். கடன்களை நினைத்து அவ்வப்போது கலக்கம் உண்டாகும். திடீர்ப் பயணங்களால் அலைச்சலும் டென்ஷனும் ஏற்படும். வழக்குகளில் இருந்து வந்த நெருக்கடிகள் நீங்கும்.
குருபகவானின் பார்வை:


குருபகவான் தனது 5-ம் பார்வையால் 12-ம் வீட்டைப் பார்ப்பதால், பணப்புழக்கம் கணிசமாக உயரும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். அரசால் அனுகூலம் உண்டு. பூர்வீக சொத்து கைக்கு வரும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களை கட்டும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.


குருபகவான் தனது 7-ம் பார்வையால் 2-ம் வீட்டைப் பார்ப்பதால், தாயாரின் ஆரோக்கியம் சீராகும். அவருடனான மனத்தாங்கல் நீங்கும். தாய்வழி சொத்து சம்பந்தப்பட்ட வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். உறவினர், நண்பர்கள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள்.


குருபகவான் தனது 9-ம் பார்வையால் 4-ம் வீட்டைப் பார்ப்பதால் எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். தாயாரின் உடல் நிலை சீராகும். புகழ் பெற்ற புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். பூர்வீகச் சொத்தை மாற்றி உங்கள் ரசனைக்கேற்ப வீடு வாங்குவீர்கள். அரசால் ஆதாயமடைவீர்கள்.
குருபகவானின் சஞ்சாரம்:


உங்கள் ராசிக்கு 2, 9-ம் இடங்களுக்கு உரிய செவ்வாயின் சித்திரை நட்சத்திரம் 3,4-ம் பாதம் துலாம் ராசியில் 2.9.17 முதல் 5.10.17 வரை குருபகவான் பயணிப்பதால், பண வரவு திருப்திகரமாக இருக்கும். வீடு, மனை வாங்குவது விற்பது நல்லபடி முடியும். அரசாங்க அதிகாரிகளின் உதவியுடன் தடைப்பட்ட காரியங்களை முடிப்பீர்கள். உடன்பிறந்தவர்களால் ஆதாயம் உண்டாகும். தந்தையாரின் ஆரோக்கியம் சீர்படும்.


6.10.17 முதல் 7.12.17 வரை ராகு பகவானின் சுவாதி நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால், திடீர் பயணங்கள் அதிகரிக்கும். குடும்பத்தில் அடிக்கடி சச்சரவுகள் வரக்கூடும். கணவன் - மனைவிக்குள் விட்டுக்கொடுத்துப் போவது நல்லது. பிற மொழி பேசுபவர்களால் ஆதாயம் உண்டாகும்.


உங்களின் ராசிக்கு 10-ம் இடத்துக்கும் உரிய குருபகவான் தன் சுய நட்சத்திரமான விசாகம் 1, 2, 3-ம் பாதம் துலாம் ராசியிலேயே 8.12.17 முதல் 13.2.18 மற்றும் 4.7.18 முதல் 2.10.18 வரை பயணிப்பதால், வங்கிக் கடன் கிடைக்கும். எதிர்பார்த்து ஏமாந்த தொகை கைக்கு வரும். சுப காரியங்கள் ஏற்பாடாகும். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்தியோகம், திருமணம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் நல்ல விதத்தில் முடியும்.


குருபகவானின் அதிசார வக்கிர சஞ்சாரம்:


14.2.18 முதல் 10.4.18 வரை விசாகம் நட்சத்திரம் 4-ம் பாதத்தில் அதிசார வக்கிரத்தில் உங்கள் ராசிக்கு 9-ம் வீட்டில் குருபகவான் சென்று அமர்வதால், அரசாங்க விஷயம் சாதகமாக முடியும். வெளிவட்டாரத்தில் மதிப்பு மரியாதை கூடும். இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். பெரிய பதவிகளுக்கு உங்களுடைய பெயர் பரிந்துரை செய்யப்படும். இளைய சகோதரியின் திருமணத்தை முன்னின்று நடத்துவீர்கள்.


குருபகவானின் வக்கிர சஞ்சாரம்:


7.3.18 முதல் 3.7.18 வரை தன் சுய சாரமான விசாகம் நட்சத்திரம் துலாம் ராசியில் குருபகவான் வக்கிர கதியில் செல்வதால், பூர்வீகச் சொத்து கைக்கு வரும். பிரபலங்களுக்கு நெருக்கமாவீர்கள். வசதியான வீட்டுக்கு மாறுவீர்கள். கணவன் - மனைவிக்குள் ஆரோக்கியமான கருத்துப் பரிமாற்றங்கள் ஏற்படும்.


வியாபாரத்தில் அவசர முதலீடுகள் வேண்டாம். பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்கப் பாருங்கள். மறைமுகப் போட்டிகள் அதிகரிக்கும். வேலையாட்களின் குறை,நிறைகளை பக்குவமாக எடுத்துச் சொல்லி அரவணைத்துச் செல்லவும். புது ஒப்பந்தங்கள் தேடி வரும். மூலிகை, தேங்காய் மண்டி, எலெக்ட்ரிகல், துரித உணவகங்கள், பெட்ரோகெமிக்கல் வகைகளால் லாபம் உண்டாகும்.


உத்தியோகத்தில் மற்றவர்களின் வேலைகளையும் சேர்த்துப் பார்க்கவேண்டி இருப்பதால் பணிச் சுமை அதிகரிக்கும். சிலருக்கு திடீர் இடமாற்றம் உண்டாகும். சிலருக்கு பணியின் காரணமாக வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ளவேண்டி இருக்கும். புதுப் பதவிகளும் பொறுப்புகளும் வரும். சம்பள பாக்கி கைக்கு வந்து சேரும்.


மாணவ மாணவிகளே! முதலில் இருந்தே பாடங்களை கவனமாகப் படிப்பது அவசியம். உங்கள் தனித் திறமையை வளர்த்துக்கொள்ளப் பாருங்கள். சக மாணவர்களிடம் அளவோடு பழகுவது அவசியம்.


கலைத்துறையினர்களே! உங்களின் படைப்புகளுக்கு வேறு சிலர் உரிமை கொண்டாடுவார்கள். பெரிய நிறுவனங்களில் இருந்து அழைப்புகள் வரும். அரசால் அனுகூலம் உண்டாகும்.


இந்த குரு மாற்றம் கடின உழைப்பு, குறைந்த வருமானம் என ஒரு பக்கம் அலைக்கழித்தாலும், சின்னச் சின்ன ஆசைகளையும் நிறைவேற்றுவதாக அமையும்.


பரிகாரம்: மகம் நட்சத்திர நாளில், உத்திரமேரூர் அருகிலுள்ள திருப்புலிவனம் ஸ்ரீவியாக்ர புரீஸ்வரரையும் ஸ்ரீசிம்மகுரு தட்சிணா மூர்த்தியையும் வணங்குங்கள்; வாழ்வில் சாதிப்பீர்கள்.

No comments

Powered by Blogger.